Thursday, November 27, 2014

பிரித்தானிய இளவரசர் ஹூக்கா புகைக்கும் போதைப்பொருள் பாவிக்கும்போது புகைப்படத்தில் சிக்கினார் !


பிரித்தானிய இளவரசர் ஹரி என்றாலே அவர் ஒரு ஜாலியான நபர் என்று அனைவரும் கூறுவார்கள். கள்ளம் கபடம் அற்ற மற்றும் மிகவும் எளிமையான வாழ்க்கையை அவர் வாழ்ந்து வருவது அனைவரும் அறிந்த விடையம். பொதுவாக பிரித்தானிய ராஜ குடும்பத்தில் உள்ள அங்கத்தவர்கள் மிகுந்த கட்டுப்பாடுடையவர்கள். பழமைவாதத்தை பின்பற்றுபவர்கள். ஆனால் அவை அனைத்தையும் உடைத்து நவீன இளவரசராக ஹரி வாழ்ந்து வருகிறார்கள். அவர் சனிக்கிழமை ஆனால் போதும் கழியாட்ட விடுதிக்குச் செல்வதும், பெண்களோடு அரட்டை அடிப்பதும் வழமையான செயலாக உள்ளது.
இன் நிலையில் அவரைப் பற்றி அடிக்கடி சர்சைக்குரிய பல செய்திகள் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்னர் ஐக்கிய அரபு ராட்சியம் சென்ற இளவரசர் ஹரி அங்கே உள்ள மதுபானச் சாலை ஒன்றில் மது அருந்துவதுபோலவும் மேலும் "ஹூக்கா" என்று அழைக்கப்படும் ஒருவகை புகைக்கும் போதைப் பொருளையும் பாவிப்பது போன்ற படங்கள் வெளியாகியுள்ளது. ஹூக்கா புகைத்தல் சில அரபு நாடுகளில் சர்வசாதாரணம். இது ஒரு போதைப் பொருள் அல்ல என்கிறார்கள். ஆனால் இதுவும் சிகரெட் போன்ற ஒன்றாகும். மது அருந்திவிட்டு இதனைப் புகைத்தால் நிச்சயம் ஒரு கிக் ஏறும் என்கிறார்கள்.
இதனையே இவர் புகைப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி சர்சையைக் கிளப்பியுள்ளது. இனி என்ன வழமைபோன தந்தை சார்ளஸ் அவரை அழைத்து கண்டிப்பார். இது தான் நடந்துவருகிறது.

No comments:

Post a Comment