Saturday, November 29, 2014

குஷ்புவின் அரசியல் பிரவேசம்: ஒரு ப்ளாஷ் பேக்!



குஷ்புவின் அரசியல் வாழ்க்கை கொஞ்சம் கரடு முரடான பாதைகள் தான்.
1970ம் ஆண்டுகளில் தனது அழகான நடிப்பாலும், அளவான கவர்ச்சியாலும் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தவர் குஷ்பு.
ஒரு நடிகைக்கு கோயில் கட்டுவது என்பது சாதரண விடமயல்ல, ஆனால் இவருக்கு தமிழ்நாட்டில் கோயில் கட்டியதால் இந்தியா முழுவதும் இவர் புகழ் பரவியது.
இவ்வாறு புகழ் ஓங்கியிருந்தாலும், இவரது அரசியல் பிரவேசம் ஒரு போர்க்களமாகவே அமைந்துவிட்டது.
சினிமாவில் சாதித்த இவரால், அரசியலில் சாதிக்க முடியவில்லை என்றே சொல்லலாம்.
2010ம் ஆண்டில் திமுகவில் இணைந்தார் குஷ்பு. கலைஞர் மேல் அன்பால் அக்கட்சியில் இணைந்த அவருக்கு அங்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
கட்சியில் அவருக்கு இருந்த முக்கியத்துவம், தேர்தல் வரும் நேரத்தில் எல்லாம் தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பளிக்கப்படும் என சலசலக்கப்பட்டபோது உணரப்பட்டது.
ஆனால், ஸ்டாலினுடன் மோதல், கட்சியில் மரியாதை கிடைக்காமை போன்ற பல காரணங்களால் திமுக கட்சியை விட்டு விலகினார்.
இழுத்து பார்த்த பாஜக
அரசியலை விட்டு ஒதுங்கிய இவர், சினிமாவில் கவனம் செலுத்த போகிறேன் என்று கூறிவந்தார்.
இவரை தங்கள் கட்சிக்குள் இணைக்க பல கட்சிகள் முன்வந்தன, அதில் முக்கியமானது பாஜக.
பாஜக கட்சி இவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தது, மேலும் இவர் பாஜகவில் இணையப்போகிறார் என்றெல்லாம் செய்திகள் உலா வந்த வண்ணம் இருந்தன.
காங்கிரஸில் அதிரடி எண்ட்ரி
அரசியலில் ஈடுபட்ட ஒருவர், அதில் இருந்து விலகி விட்டால், அவர்களால் சும்மா இருக்க முடியாது என்பதை நிரூபித்து விட்டார் குஷ்பு.
ஆம், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாகிவிட்டார்.
இணைந்ததோடு மட்டுமல்லாமல், நான் சேர வேண்டிய இடத்திற்கு வந்துவிட்டேன், நாட்டு மக்களுக்கு நல்லது செய்யப்போகிறேன் என்றெல்லாம் அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.
எதுவாயினும், தனக்காக கோயில் கட்டிய மக்களுக்கு, நல்லது செய்தால் சரிதான்.

No comments:

Post a Comment