Tuesday, November 25, 2014

ஒன்ராறியோவின் தென்பகுதியை உலுக்கிய புயல்காற்றின் அனர்த்தங்கள்!!.

கனடா- ரொறொன்ரோ ஹைட்ரோ வாடிக்கையாளர்கள் கிட்டத்தட்ட 2,000பேர்கள் மற்றும் 67,000 Hydro One சந்தாதாரர்கள் மின்சாரத்தடையினால் அவதிப்படுகின்றனர். ஒன்ராறியோவின்  தென்பகுதியை கடந்த இரவு உலுக்கிய புயல்காற்றினால் மின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டதுடன் முறிந்து விழுந்த மரங்களினால் பல வீடுகள் சேதமடைந்தும் உள்ளன.

திங்கள்கிழமை மாலை 8-மணியளவில் கிட்டத்தட்ட 10,000 ரொறொன்ரோ ஹைட்ரோ வாடிக்கையாளர்கள் மற்றும் 87,000 Hydro One வாடிக்கையாளர்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர்.
மரங்கள் முறிந்து விழுந்ததாலும் மின்கம்பங்கள் சேதமடைந்தமை மின் தடைக்கு காரணமென ரொறொன்ரோ ஹைட்ரோ பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சரிந்துள்ள மின் இணைப்புகள் காரணமாக குடியிருப்பாளர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு ரொறொன்ரோ ஹைட்ரோ கேட்டுக்கொண்டுள்ளது.
தென்மேற்கு நோக்கிய கடுமையான காற்று மணித்தியாலத்திற்கு 90 முதல் 100 கிலோமீற்றர்கள் வேகத்தில் வீசியதுடன் பருவகாலத்திற்கு உரியதற்ற வெப்பநிலையையும் கொண்டு வந்திருந்தது என கனடா சுற்றுச்சூழல பிரிவு தெரிவித்தது.
செவ்வாய்கிழமை மீண்டும் குளிரான வெப்பநிலை திரும்பலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது. பிற்பகல் பனிப்பொழிவு ஏற்படக்கூடிய சாத்திய கூறுகள் தென்படுவதாகவும் இரவு வெப்பநிலை பூச்சியத்திற்கு கீழ் 3ஆக குறைந்து காணப்படலாம் எனவும் கூறப்படுகின்றது.
win15win13win12win10win9win8win7win6win5win4win3win1
 - See more at: http://www.canadamirror.com/canada/34555.html#sthash.VSzKF4Wi.dpuf
ரொறொன்ரோ பெரும்பாகம் பூராகவும் வீசும் பலத்த காற்றினால் மின்சாரம் துண்டிப்பு, வீதியெங்கும் குப்பை சிதறல்கள்.

கனடா- ரொறொன்ரோவில் ஊளையிடும் காற்று உச்ச வரம்பை எட்டியுள்ளதோடு மழை சூரியவெளிச்சம் போன்ற காலநிலைகளுடன் இன்றய நாள் ஒரு புதிய வெப்பநிலையையும் பதித்துள்ளது.

இதுமட்டுமன்றி காற்றின் வேகத்தால் பல இடங்களில் மின்சார துண்டிப்பும் ஏற்பட்டுள்ளது. காற்றின் வேகத்தால் வீதிகள் எங்கும் குப்பை கூளங்கள் சிதறுண்டு காணப்படுவதுடன் கனடா சுற்று சூழல் பிரிவினரால் வின்சரிலிருந்து கிங்ஸ்ரன் வரையிலான பகுதிகளிற்கு காற்று எச்சரிக்கையும் விடுவிக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் மணித்தியாலத்திற்கு ஒன்ராறியோவின் தென்பகுதியின் பெரும்பாலான இடங்களில் 60-70கிலோ மீற்றர்கள் வேகத்திலும் சில இடங்களில் 90-100 கிலோ மீற்றர் வேகத்திலும் கூட வீசலாம் என எச்சரிக்கப் பட்டுள்ளது.
காற்றின் வேகம் மரங்களை முறிக்க கூடியதாகவும், மின்சாரத்துண்டிப்பை ஏற்படுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் வாகனமோட்டுதல் இக்காற்றினால் கடினமான நிலைமையை ஏற்படுத்தலாம் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.
திங்கள்கிழமை மாலை அளவில் நகரின் மேற்கு பகுதிகளின் பல இடங்களில் மின்சார செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாக ரொறொன்ரோ ஹைட்ரோ அறிவித்துள்ளது. மாலை 5.30-மணியளவில் 36,000 வாடிக்கையாளர்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர்.
காற்று வேகத்தினால் சிதறிப்பறக்கும் குப்பைகளால் நெடுஞ்சாலைகளில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக பல அறிவித்தல்கள் பொலிசாருக்கு கிடைத்துள்ளது. பல இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழும் நிலையில் காணப்படுவதாக தீயணைப்பு பிரிவினர் அழைப்புகளை பெற்றுக்கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
புதிய வெப்பநிலை பதிவோடு பலத்த காற்றும் சேர்ந்த காலநிலை காணப்படுகின்றது.  திங்கள்கிழமை நகரின் வெப்பநிலை 18C. . இது 1946-ல் காணப்பட்ட இன்றய நாளின் 15C சாதனையை வென்றுவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
எனினும் மற்றொரு திருப்பமாக மாகாணத்தின் வெப்பநிலை ஒரே இரவில் வீழ்ச்சி அடையும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
gtagta1gta2
 - See more at: http://www.canadamirror.com/canada/34526.html#sthash.Usgh4IkI.dpuf

No comments:

Post a Comment