Sunday, November 23, 2014

குழந்தைக்கு பால் கொடுப்பதை செல்பி எடுத்து வெளியிட்ட நடிகை !

அமெரிக்க நடிகை ஒருவர் குழந்தைக்கு பால் கொடுப்பது போல எடுக்கப்பட்ட செல்பியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வரும் நடிகை அலீசா மிலானா, சமீபத்தில் குழந்தைக்கு பால் கொடுப்பது போன்ற படத்தை வெளியிட்டுள்ளார்.
தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக இந்த போஸ் கொடுத்ததாக அலீசா கூறினாலும் இந்த புகைப்படத்தில் ஆபாசமே மிஞ்சியிருப்பதாக பலர் விமர்சித்துள்ளனர்.
இதுகுறித்து அலீசா கூறியதாவது, கிம் கர்தஷியன் நிர்வாணமாக போஸ் கொடுப்பதையே இரசிக்கும் அமெரிக்கர்கள் என்னுடைய இந்த போஸை மட்டும் ஏன் குறை கூறுகின்றனர்.
காசு வாங்கிக்கொண்டு போஸ் கொடுத்த கிம்தர்ஷனை இரசிக்கும் மக்கள் ஒரு விழிப்புணர்ச்சிக்காக நான் கொடுத்த போஸை விமர்சிப்பது முட்டாள்தனம் எனக் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment