Friday, November 28, 2014

மீன் சந்தையை விட தரம்கெட்டுப்போன லண்டன்: அடித்து பிடித்து பொருட்களை எடுத்த மக்கள் !

பிரித்தானியாவில் உள்ள வெள்ளை இனத்தவர்கள், முன்னேறி வரும் நாடுகளில் உள்ளவர்களைப் பார்த்து நக்கலடிப்பது வழக்கம். குறிப்பாக இந்திய தெருக்களையும் அங்கே கூடி நிற்கும் மனிதர்களை பார்த்து இவர்கள் நக்கலடிப்பார்கள். ஒரு பொருளை வாங்க ஏன் இவ்வளவு முந்தியடிக்கவேண்டும் ? ஆறுதலாகச் சென்று வாங்கலாமே ? ஏன் இவ்வளவு கூட்டம் கூடுகிறது ? என்று எல்லாம் கிண்டல் அடிப்பார்கள். ஆனால் இம்முறை பிரித்தானியாவில் "கறுப்பு வெள்ளிக்கிழமை" தினமான இன்று, என்றுமே இல்லாதவாறு மக்கள் முண்டி அடித்துச் சென்று பொருட்களை வாங்கியுள்ளார்கள். வருடத்தில் ஒரு நாள் கறுப்பு வெள்ளிக்கிழமை என்ற தினம் வருகிறது. அன்றைய நாளில் பல கடைகள் தமது பொருட்களை பலவற்றை 50 வீத கழிவில் கூட விற்கிறார்கள்.
இதனால் குறித்த அந்தக் கடைகள் காலையில் திறக்க முன்னரே கடைக்கு வெளியே கூடி நின்ற மக்கள் முண்டியடித்துச் சென்று பொருட்களை வாங்கி பெரும் களோபரத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். பல கடைகளின் உரிமையாளர்கள் பொலிசாருக்கு போன் செய்து கூட்டத்தை அடக்கும்படி கோரவே, லண்டனில் உள்ள பொலிசார் நூற்றுக்கணக்கான கடைகளுக்குச் செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இதேவேளை ஒரு பொருளுக்காக பலர் முண்டியடித்து , பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளார்கள். அதிலும் குறிப்பாக இங்கே உள்ள படங்களைப் பாருங்கள். ஒரு கடையில் TV ஒன்றை ஒருவர் எடுக்க அதனை 2 பேர் கட்டிப் பிடித்து, தான் தான் முதலில் தொட்டேன் என்று பிரச்சனைப் படுவதை பார்த்தீர்களா ? நாம் எல்லாம் இருப்பது லண்டனிலா அல்லது வறுமைப்பட்ட ஒரு நாட்டில் உள்ள மீன் சந்தையிலா என்று எண்ணும் அளவு நிலைமை மோசமாக மாறிவிட்டது.
அட கடைகள் தான் இப்படி அல்லோல கல்லோலம் என்றால், வீட்டில் இருந்தபடியே இன்ரர் நெட் சென்று, பொருட்களை வாங்கும் கும்பலும் சும்மா இருக்கவில்லை. ரெஸ்கோ, அஸ்டா, ஜோன் லூவிஸ் போன்ற கடைகளின் இணையங்களின் சேர்வர்கள் இன்று செயலிழந்து போகும் அளவு மக்கள், இன்ரர் நெட் ஊடாக பொருகளை வாங்க முண்டியடித்துள்ளார்கள். இச்செய்தியை எழுதும்வரை ரெஸ்கோவின் டாரக்ட் இணையம் வேலைசெய்யவே இல்லை என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். பிரித்தானியாவில் உள்ளவர்களுக்கு இனி ஏனைய நாட்டவர்களை பார்த்து நக்கலடிக்கும் அறுகதை அற்றவர்கள் ஆகிவிட்டார்கள்.





No comments:

Post a Comment