Friday, November 21, 2014

மாவீரர்கள் புனிதமானவர்கள் - பாராளுமன்றில் சி.சிறிதரன் உரை!

ஜே.வி.பி. மீண்டும் வரலாற்றுத் தவறிழைக்குமா?
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 02:36.56 PM GMT ]
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவிற்கு ஜே.வி.பி. ஆதரவு வழங்குவதில்லை என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்க வேண்டும் என்பதற்காகவே ஜே.வி.பி. போராடி வருகின்றது. மற்றபடி ஒருவருக்குப் பதிலாக இன்னொருவரை அதிகாரத்தில் அமர்த்தி அழகு பார்ப்பதில் ஜே.வி.பி. க்கு உடன்பாடில்லை.
எனவே அரசியலமைப்பை மாற்றி, ஜனாதிபதி முறையை ரத்துச் செய்வதற்கான போராட்டங்களில் தொடர்ந்தும் ஈடுபட ஜே.வி.பி. தீர்மானித்துள்ளது.
இதன் காரணமாக தற்போதைக்கு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவை வழங்குவதில்லை என்று ஜே.வி.பி. உயர்பீடம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் குழுவை கூட்டி, உரிய முறையில் ஊடகங்களுக்கும் அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த தகவல் வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே வரலாற்றுத் திருப்புமுனையான காலகட்டத்தில் ஜே.வி.பி. இவ்வாறான ஒரு முட்டாள்தனமான தீர்மானத்தை எடுப்பது மஹிந்தவுக்கு ஆதரவான நடவடிக்கையாகவே மாற்றம் பெறும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு தேர்தலிலும் ஜே.வி.பி.யின் ஆதரவைக்கொண்டே மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBRVKYhv2.html


தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவசரமாக முடிவெடுக்காது!- இரா. சம்பந்தன்
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 03:08.33 PM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான மைத்திரிபால சிறிசேன அவர்கள் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிலைமைகளை ஆராய்ந்தே முடிவெடுக்கும் என்று அந்த அமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேன அவர்கள் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவரது செவ்வியையும் தான் கேட்டதாகக் கூறிய சம்பந்தன் அவர்கள், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதாக அவர் கூறிய சில அம்சங்களை வரவேற்ற போதிலும், அவை குறித்தும், யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்தும் தமது கட்சியே ஆராய்ந்து முடிவெடுக்கும் என்றும் கூறினார்.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானால் 100 நாட்களுக்குள் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வேன் எனக் கூறியிருக்கிறார். அது வரவேற்கப்பட வேண்டீய விடயம். இன்னும் பல நல்ல கருத்துக்களை முன்வைத்திருக்கிறார். அவர்  ஒரு நிதானமாக செயற்படக்கூடிய அரசியல் வாதி.
இனப்பிரச்சினை சம்பந்தமாக அவர் எதுவித கருத்துக்களை முன்வைக்கவில்லை. ஆனால் அவருடன் இணைந்திருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அவர்கள் சிறுபான்மையினர் பிரச்சினை நியாயமான முறையில் தீர்க்கப்படும் என கருத்துக் கூறியிருந்தார் எனவும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBRVKYhv4.html


மாவீரர்கள் புனிதமானவர்கள் - பாராளுமன்றில் சி.சிறிதரன் உரை
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 03:29.45 PM GMT ]
மாவீரர்கள்  புனிதமானவர்கள் என பாராளுமன்றில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் உரையாற்றியுள்ளார்.

No comments:

Post a Comment