Monday, November 24, 2014

ஐ.எஸ்.ஐ.எஸ்.-ஐரோப்பாவை உலுக்கும் இவர்களை வளர்த்தது யாராம் எல்லாம் அமரிக்க,ஐரோப்பிய சேவையே!

லண்டனில் ISIS தீவிரவாதிகள் நடத்தும் "எஸ்டேட் ஏஜன்ட்" நடந்தது என்ன ?

[ Nov 24, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 7195 ]
பிரிட்டன் சரே மாநகரில் ISIS என்னும் பெயரில் ஒரு எஸ்டேட் ஏஜன்ட் நடத்தப்பட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள பலரும் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கும் இந்த எஸ்டேட் ஏஜன்டுக்கும் தொடர்பு இருப்பதாக நினைத்து அங்கே செல்வதை குறைத்து விட்டார்கள். வீடுகளை வாங்கவும், விற்கவும் மற்றும் வாடகைக்கு பெற்றுக்கொள்ளவும் பலர் இந்த எஸ்டேட் ஏஜன்டை முன்னர் நாடினார்கள். ஆனால் சமீபகாலமாக பல வாடிக்கையாளர்கள் அங்கே செல்வதை குறைத்துவிட்டார்கள். சடுதியாக தமது வியாபாரம் வீழ்ந்துவிட்டதை உணர்ந்த அதன் உரிமையாளருக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை.
கடந்த 10 வருடங்களாக அவர் இதே பெயரில் தான் எஸ்டேட் ஏஜன்டை நடத்தி வந்துள்ளார். பின்னர் தான் சிலரிடம் விசாரித்தவேளை "ISIS" என்பது இஸ்லாமிய தீவிரவாதிகளின் பெயர் ஆகும். அதன்பெயரில் நீங்கள் வியாபார நிலையத்தை வைத்திருந்தால் யார் உங்களிடம் வருவார்கள் என சில வாடிக்கையாளர்கள் கேட்டுள்ளார்கள். இதனால் அவர் உடனடியாக தனது நிறுவனத்தின் பெயரை மாற்றியுள்ளார். இதுபோல மேலும் பல சம்பவங்கள் பிரிட்டனில் இடம்பெற்றுள்ளது. இப்பெயரில் இயங்கிவரும் பல சர்வதேச நிறுவனங்கள் கூட தமது பெயரை தற்போது மாற்றி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
http://www.athirvu.com/newsdetail/1493.html


பிரித்தானியாவில் பகிரங்கமாக தலையை துண்டித்து படுகொலை செய்ய சதி, சந்தேக நபர்கள் கைது !

[ Nov 24, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 5180 ]
பிரித்தானிய பிரஜையொருவரை பகிரங்கமாக தலையை துண்டித்து படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக குற்றம்சாட்டப்பட்டு மூன்று இளைஞர்களை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பொலிசார் கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர். நதீர் அலி சையத், யுசாப் ஷா சாயீத் மற்றும் ஹாசீப் ஹமாயூன் ஆகியோரே போர் வீரர் நினைவுத்தினத்திற்கு மூன்று தினங்களுக்கு முன்னதாக பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத சந்தேக நபர்களான இவர்களுக்கு எதிராக இன்று வெஸ்ட்மினிஸ்டர் மஜிஸ்திரேட் நீதிமன்றில் நடைபெற்ற ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது சந்தேக நபர்கள் சார்பில் எந்தவொரு பிணை மனுக்களும் தாக்கல் செய்யப்படாததை அடுத்து மூவரும் தொடர்ந்து தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இந்த வழக்கு குறித்த மேலதிக விபரங்கள் எதனைவும் வெளியிட முடியாது என பொலிசார் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும் சந்தேக நபர்கள் மூவரும், பிரித்தானிய மக்கள் முன்ணிலையில் பிரித்தானியப் பிரஜையொருவரை பகிரங்கமாக தலையை துண்டித்து படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியிருந்ததாக வழக்குத் தொடுநர் ரெபேக்கா முண்டே தெரிவித்துள்ளார். லண்டன் பகுதியான ஹவுன்ஸ்லோவைச் சேர்ந்த 21 வயதுடைய சையத், ஹை விகோம்பே பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய செயீட் மற்றும் ஹேயிஸ் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஹமாயூன் ஆகியோர் கடந்த நவம்பர் ஆறாம் திகதி லண்டன் பகுதியிலும், ஹை வெகும்பே பகுதியிலும் வைத்து கைதுசெய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மற்றுமொருவர் ஹக்ஸ்பிரிஜ் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டு எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது கடந்த சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார். எனினும் ஏனைய மூவரும் இன்று வியாழக்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பயங்கரவாத தடுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணையின் போது சையத் மற்றும் சயீட் ஆகிய இருவரும் நின்றுகொண்டு சிரித்துக்கொண்டு இருந்ததாக பீ.பீ.சி செய்தியாளர் தெரிவித்துள்ளார். அதேவேளை மூன்றாவது நபரான ஹமாயூன் மௌனமாக அமர்ந்துகொண்டிருந்ததாகவும் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத செயலொன்றுக்காக கூட்டாக முயற்சித்தனர் என்ற குற்றச்சாட்டே இந்த மூவர் மீதும் பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஸ்கொட்லண்ட் யாட் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
http://www.athirvu.com/newsdetail/1494.html


லண்டனில் உள்ள உரப்பைகளை குறிவைக்கும் ISIS முஸ்லீம் தீவிரவாதிகள்: உழவர்கள் படும் பாடு !

[ Nov 24, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 6750 ]
லண்டனில் உள்ள பொலிசாருக்கு தற்போது ISIS காச்சல் பிடித்துள்ளது. லண்டன் மேல் தீவிரவாதிகள் நடத்தவுள்ள தாக்குதலை தம்மால் முழுமையாக தடுத்து நிறுத்த முடியாது என்று பகிரங்கமாகவே பொலிசார் தெரிவித்துள்ளார்கள். ஏதாவது ஒரு வகையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியே தீருவார்கள் என்று மெற்றோ பாலிடன் பொலிசார் தெரிவித்துள்ள கருத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும் இம்முறை பொலிசார் உழவர்களை போட்டு படாத பாடு படுத்துகிறார்கள். அது என்னவென்றால் பிரிட்டனுக்குள் வெடிபொருட்களை கடத்திவருவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இதனால் வெடிகுண்டை செய்ய முஸ்லிம் தீவிரவாதிகள் வேறு யுக்தியைக் கையாள உள்ளார்கள் என்ற ரகசிய தகவல் ஒன்று ஸ்காட்லன் யாட் பொலிசாருக்கு கிடைத்துள்ளது என்கிறார்கள்.
அதாவது உழவர்கள் பாவிக்கும் உரங்கள் ஆகும். "யூரியா" போன்ற உரத்தை எடுத்து சில பதார்த்தங்களையும் பெற்றோலையும் கலந்து 7 நாட்கள் ஊறவைத்தால், அதனை வெடிமருந்துபோல பாவிக்கலாம். சிலவேளைகளில் இவ்வாறு தயாரிக்கப்படும் வெடிபொருட்கள் C4 ரக வெடிபொருட்களை விடவும் பவர்புல்லாக இருக்கும். இதனால் உழவர்கள் பாவிக்கும் உரங்களை அன்றாடம் கவனிக்கவேண்டும் என்றும். அதனை பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் பொலிசார் தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். இதேவேளை இதுபோன்ற உரத்தை யாராவது அதிக அளவில் வாங்கினால் அதனை தமக்கு அறிவிக்கவேண்டும் என்று பொலிசார் கடை உரிமையாளர்களிடம் கூறியும் வருகிறார்கள். அமெரிக்கா சி.ஐ.ஏ தனது தேவைக்காக பின் லேடன் போன்ற தீவிரவாதிகளை உருவாக்கியது. பின்னர் தமது வேலை முடிந்ததும் அவர்களை துக்க திட்டமிட்டது.
இதன் காரணமாக அவர் அமெரிக்காவின் படுபயங்கர எதிரியானார். பல முஸ்லீம் தீவிரவாதிகள் உருவாக அமெரிக்கா தான் காரணம். ஆனால் சும்மா இருந்த பிரிட்டன் அமெரிக்காவுக்கு நாம் தோழொடு தோழ் கொடுப்போன் என்று வீர வசனம் பேசி அமெரிக்காவுக்கு உதவ களத்தில் இறங்கியது. அதற்கான பலனையே இவர்கள் தற்போழுது அனுபவித்து வருகிறார்கள் என்று பிரித்தானியாவில் உள்ள சாதாரண குடிமக்கள் தெரிவிக்கிறர்கள். எமது நாடு ஏன் இந்தப் பிரச்சனைக்குள் சென்று மூக்கை நுளைக்கவேண்டும் ? இதனால் தான் அவர்கள் எமது நாட்டையும் தாக்குகிறார்கள் என்று பல பிரித்தானிய பிரஜைகள் தெரிவிக்கிறார்கள். சில அரசியல்வாதிகள் எடுக்கும் முடிவுகள், அன் நாட்டை அதளபாதாளத்தில் தள்ளிவிடும். அந்த வகையில் பிரித்தானியாவின் முன் நாள் பிரதமர் டோனி பிளையர் எடுத்த சில முடிவுகள் இன்றும் பிரித்தானியாவை நிம்மதியான நாடாக இருக்கவிடவில்லை எனலாம்.
http://www.athirvu.com/newsdetail/1495.html


ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் 1000 ஸ்வீடன்-ஜெர்மனி இளைஞர்கள் அதிரும் தகவல் !

[ Nov 24, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 5790 ]
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்வீடன் மற்றும் ஜெர்மனி இளைஞர்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈராக் மற்றும் சிரியாவிலிருந்து கைப்பற்றப் பட்ட பகுதிகளை இணைத்து தனி நாடு ஒன்றை அமைத்துள்ளனர் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள். அந்நாட்டில் தங்களுக்கென்று ராணுவத்தையும் அவர்கள் உருவாக்கியுள்ளனர். அந்த ராணுவத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களை அவர்கள் சேர்த்து வருகின்றனர். இந்நிலையில் மேற்கத்திய நாடுகளான ஜெர்மனி மற்றும் ஸ்வீடனில் இருந்து 1000 இளைஞர்கள் ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்துள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது.
இதில், ஸ்வீடனில் இருந்து மட்டும் 500க்கும் அதிகமான இளைஞர்கள் சேர்ந்துள்ளனராம். இத்தகவலை ஸ்வீடன் உளவுத்துறை தலைமை அதிகாரி ஆண்டர்ஸ் தர்ன்பெர்க் தெரிவித்துள்ளார். இதேபோன்று, ஜெர்மனியில் இருந்து 500க்கும் அதிகமான இளைஞர்கள் ஐ.எஸ். ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் இணைந்துள்ளதாக ஜெர்மன் அமைச்சர் தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஜெர்மன் மற்றும் ஸ்வீடன் இளைஞர்களுடன் சில பெண்களும் சென்றிருப்பதாக தகவலகள் தெரிவிக்கின்றன.
http://www.athirvu.com/newsdetail/1496.html



No comments:

Post a Comment