தமிழீழ தேசியத்தலைவரும், தோழர்களும் கண்கலங்கி நிற்க நவம்பர் 27ஆம் நாள் 1982ஆம் ஆண்டு மாலை 6.05 மணிக்கு முதற்களப்பலியாகிய மாவீரனே லெப். சங்கர் என்றழைக்கப்படும் சத்தியநாதன். இந்நாளே தேச விடுதலைக்காக மரணித்த மாவீரர்களுக்கு தமிழீழ மண்ணில் மாவீரர் நாள் என்று உறுதிப்பாடாயிற்று. இவ் எழுச்சி நாளே தமிழீழத்தின் தேசிய நாளாகவும் பிரகடனப்படுத்தபட்டுயள்ளது. வருடம் தோறும் இப் புனித நாளினை தமிழினம் உணர்வு புர்வமாகக் கொண்டாடுகிறது. நினைவு கூருகிறது.
மாவீரர் நாளானது மாவீரர் எழுச்சிநாளாகத் உலகத்தமிழினத்தால் கொண்டாடட்படுகிறது. எழுச்சி மிகுந்த இந்த மாவீரர் எழுச்சியானது நம்பர் 25 ல் தொடங்கி மாவீரர் நாளான நவம்பர் 27-ல் முடிவடைகின்றது.
தமிழ் தேசியத்தலைவர் 1989ம் ஆண்டில் தமிழீழ மாவீரர் நாளை முதன்முறையாக அறிவித்தார். அந்தவகையில் இந்தாண்டு 26வது தொடர் ஆண்டாக மாவீரர் நினைவு கடைப்பிடிக்கப்படுகின்றது.
இந்தவகையில் ஏனைய நாடுகளில் அந்நாடுகளில் தமது வீரர்;களுக்கான நினைவு நாளை கடைப்பிடிக்கப் படுவதற்கும் தமிழீழ மாவீரர் நாளைக் கடைப்பிடிப்பதற்கும் பெரும்வேறுபாடுகளுண்டு. ஏனைய நாடுகளிலெல்லாம் விடுதலைக்குப்பின் அமைந்த அரசுகளால் விழா எடுக்கப்படுகின்றனவே தவிர, போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமகாலங்களில் விழாக்கள் எடுக்கப்படுவதிலை. ஆனால் விடுதலை போட்டம் வீறோடு நடைபெற்றுக்கொண்டுடிருக்கும் சம காலத்திலேயே தமிழ் மக்கள் தம் மண்ணின் விடிவுக்காகத் தம் இன்னுயிரை ஈந்த மாவீரர்களை எழுச்சியோடு நினைவு கூர்ந்துவருகின்றனர்.
அதேபோன்று உலகில் எங்குமே தமிழீழம் மாவீரர் நாள் நினைவு போல மாவீரர்களை நினைவு கூறும் நிகழ்வுகள் அவர்களின் பெற்Nறூரும் குடும்பத்தினரும் போற்றப்பட்டு மதிப்பளிக்கப்படும் நிகழ்வுகள் நடைபெற்றதாகவோ, நடைபெறுவதாகவோ வரலாறில்லை.
அத்தகைய ஒரு தனித்துமான தமிழ் வீரமறவர் வழிபாட்டை முழுமையாக வடிவமைத்து தமிழ் மக்கள் முன்னெடுக்கும் வகையில் அளித்த பெருமை தமிழ் தேசித்தலைமையையே சாரும்.
தமிழர் நிகழ்வுகளின் போது கடைப்பிடிக்கவேண்டிய ஒழுங்குமுறை
பொதுச்சுடர் தேசியக் கொடியேற்றல்ஈகைச்சுடர்மலர்வணக்கம்அகவணக்கம்உறுதியுரைநினைவுரை
அனைத்து விடயங்களிலும் சிவப்பு, மஞ்சள் துணிகளைப் பாவித்தல் வேண்டும். வெள்ளையைத் தவிர்த்தல் நன்று. கறுப்பு கரும்புலிகள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் பாவித்தல் நன்று.
தவிர்க்க வேண்டிய வார்த்தைகள் – அஞ்சலி, மொளன வணக்கம் அல்லது அஞ்சலி, மலரஞ்சலி, மங்கள் விளக்கு, அஞ்சலியுரை, அஞ்சலிக்கூட்டம், ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடம் என குறித்துக் கூறுதல்
பயன்படுத்தப்பட வேண்டிய வார்த்தைகள் – வீரவணக்கம், அகவணக்கம், மலர்வணக்கம், ஈகைச்சுடர், பொதுச்சுடர், வீரவணக்கஉரை, வீரச்சாவு, வீரவணக்கக்கூட்டம்
எக்காரணம் கொண்டும் தேசிக் கொடியைக் கம்பத்துடன் மடித்துக்கட்டுதல் தவிர்க்கப்படல் வேண்டும் தேசியக் கொடியை மடித்து ஒரு தட்டத்தில் பீடத்திற்கு அருகில்
ஒரு இருக்கையில் வைக்க வேண்டும்.
வெளிநாடுகளில் முதலில் தமிழர் வாழும் நாட்டிற்கு மதிப்பளித்து அக்கொடியே முதலில் ஏற்றப்படவேண்டும். பின்னர் தமிழீழ தேசிக்கொடி ஏற்றப்பட வேண்டும்.
அதேபோன்று இறுதியில் கொடியிறக்கத்தின் போது தமிழீழ தேசிக் கொடி முதலில் இறக்கப்பட்டு அதன் பின்னர் இறுதியாத தமிழர் வாழும் தேசத்தின் கொடி இறக்கப்படவேண்டும்.
மாவீரர் நாளன்று கைக்கொள்ளப்படும் நடைமுறை
நினைவொலி எழுப்புதல் (தாயக நேரம் மாலை 6.05 மணி) (இது ஐரோப்பாவில் பிற்பகல் 1.05 மணிக்கும், பிரித்தானியாவில் மதியம் 12.05 மணிக்கும்;, கனடாவில்
காலை 7.05 மணிக்கும் அமையும்) 6.05 மணிக்கு அனைத்து வணக்க இடங்களிலும் மணி ஒரு மணித்துளி நேரம் எழுப்பப்படும்.
அகவணக்கம் (தாயக நேரம் மாலை 6.06 மணி)
மாவீரர்களுக்கான நினைவொலி நிறுத்தப்பட்டவுடன் 6.06 மணிக்கு மாவீரர்களுக்கான ஒரு மணித்துளி அகவணக்கம் செலுத்தப்படும்.
ஈகைச் சுடரேற்றல் (தாயக நேரம் மாலை 6.07) அகவணக்கம் நிறைவுற்றதும் 6.07 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றப்படல் வேண்டும். விடுதலை அமைப்பின் முதன்மையானவர்
மத்திய சுடரை ஏற்ற மாவீரர்களின் பெற்றோர் உரித்துடையோர் தீ;ச்சுடரை சமகாலத்தில் ஏற்றுவர்.
இந்த சுடரேற்றும் நிகழ்வானது விடுதலைப்பாதைக்கு உறுதியையும், உணர்வையும் கொடுத்து நிற்கின்றது.
இங்கு கவனிக்கத்தக்க விடயம் சிறீலங்கா பிற்காலத்தில் அரை மணித்தியால நேர மாற்றம் ஒன்றை செய்யது. அதனை தமிழர் தேசம் கடைப்பிடிக்கவில்லை.
அவ்வாறான ஒழுங்குமுறைiயே தற்போதும் எம்மால் தொடர்ந்தும் கைக்கொள்ளப்படுகின்றது.
தமிழர் தேசிய விடுமுறை நாளாகிய இந்நாளில் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களும் பணிவிடுப்பெடுத்து ஐரோப்பாவில் பிற்பகல் 12.30 மணிக்கும், பிரித்தானியாவில்
முற்பகல் 11.30 மணிக்கும், கனடாவில் காலை 6.30 மணிக்கும் ஆரம்பமாகும் மாவீரர் நாள் நிகழ்வுகளில் ஒரே இடத்தில் பல்லாயிரத்தில் தமிழர் ஒற்றுமையை
வெளிப்படுத்திவாறு கலந்து தமிழர் உரிமைக்காக தொடர்ந்தும் உரத்துக்குரல் எழுப்பி நிற்கின்றனர்.
நேரு குணரத்தினம்
day 27