Friday, November 21, 2014

யாழ். பல்கலை கலைப்பிரிவு மாணவனை படைப் புலனாய்வாளர்கள் கைது செய்ய முயற்சி!

களுத்துறையில் ஐ.தே.க. கொண்டாட்டம்! ஆளுங்கட்சி தலைமறைவு
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 04:34.51 PM GMT ]
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அறிவிக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில் களுத்துறையில் பெரும் கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
களுத்துறை போதி மர சந்தி தொடக்கம் நகரம் வரை நிறைந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தியும், ஜயவேவா கோசம் எழுப்பியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பொதுவாக களுத்துறையில் எப்போதும் செல்வாக்குச் செலுத்தும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தனவின் குண்டர் கும்பல் கூட இன்று அங்கு திரண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் முன்னால் மௌனமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
இந்தக் கொண்டாட்டங்களில் பட்டாசு வெடித்தபோது முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காயமடைந்து நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


யாழ். பல்கலை கலைப்பிரிவு மாணவனை படைப் புலனாய்வாளர்கள் கைது செய்ய முயற்சி
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 04:41.28 PM GMT ]
யாழ். பல்கலைக்கழக 3ம் வருட கலைப்பிரிவின் ஊடக கற்கை பிரிவு மாணவன் ஒருவருடைய வீட்டை சுற்றிவளைத்த புலனாய்வாளர்கள் குறித்த மாணவனை கைதுசெய்ய முற்பட்ட சம்பவம் ஒன்று இன்றைய தினம் இடம்பெற்றள்ளது.
யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினம் தொடர்பான சுவர் ஒட்டிகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒட்டப்பட்டிருந்த நிலையிலேயே இன்று மேற்படி சம்பவம்  இடம்பெற்றள்ளது.
மேற்படி பிரிவில் கல்விகற்கும் க.நிவாஸ் என்ற மாணவனின் நீர்வேலி வீட்டிற்கு இன்று மாலை 8 மணியளவில் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் குறித்த மாணவன் தொடர்பாக விசாரணை நடத்தியதுடன் அவனை கைதுசெய்ய முற்பட்டுள்ளனர்.
எனினும் அவன் வீட்டை விட்டு தப்பியோடிய நிலையில் வீட்டிலிருந்த பெற்றோரை மர்மநபர்கள் அச்சுறுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBRVKYhw0.html

No comments:

Post a Comment