Saturday, November 29, 2014

முழு பிரித்தானியாவையும் முட்டாளாக்கிய கடைக்காரர்கள்: விலை குறைப்பு என்பது பெரும் நாடகம் !

நேற்றைய தினம் பிரித்தானியாவில் கறுப்பு வெள்ளிக்கிழமை கொண்டாப்பட்டது. இதன்போது தமது கடைகளில் உள்ள சில பொருட்கள் அரைவிலையில் அல்லது கால் விலையில் விற்கப்படும் என்று பல கடைகள் அறிவித்தார்கள். பிரித்தானியாவில் கறுப்பு வெள்ளிக்கிழமை வருடா வருடம் கொண்டாப்படுகிறது. ஆனால் இம் முறை பல ஊடகங்கள் இதனைப் பெரிது படுத்தி செய்தியை வெளியிட்டார்கள். பல கடைகள் தமது விலைய 50 அல்லது 60 வீதத்தால் குறைத்துள்ளார்கள் என்று இந்த ஊடகங்கள் செய்தியை வெளியிட்டதால் மக்கள் முண்டியத்து அங்கே சென்று பல பொருட்களை வாங்கி கடைகளையே காலிசெய்யும் அளவு நிலைமையை மாற்றிவிட்டார்கள். ஆனால் இவை அனைத்தும் ஒரு புலுடா(ஏமாற்று வேலை) என்று புத்தி ஜீவிகள் தற்போது தரவுகளோடு கூறுகிறார்கள்.
அதாவது பிரித்தானியாவில் உள்ள பல கடைகள், தமது பொருட்களின் விலையை ஏற்கனவே விலையேற்றிவிட்டார்கள். ஆனால் அனைவராலும் அறியப்படும் சில பொருட்கள் இருக்கிறது அல்லவா ? குறிப்பாக ஆப்பிள் ஐபேட், ஆப்பிள் போன் இதுபோன்ற பொருட்களின் விலையை அவர்கள் கூட்டவில்லை. ஏன் என்றால் மக்கள் அதனை அவதானிப்பது வழக்கம். ஆனால் ஏனைய பொருட்களின் விலையை அவர்கள் ஏற்கனவே அதிகரித்துள்ளார்கள். பின்னர் சுமார் 2 அல்லது 3 மாதங்கள் கழித்து கறுப்பு வெள்ளியன்று பொருட்களின் விலைகளை தாம் குறைப்பதாக அறிவித்து பழைய விலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளார்கள். ஆனால் இதனை உணராத மக்கள் முண்டியடித்து அப்பொருட்களை வாங்கிச் சென்றுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இதேவேளை மிகவும் பிரபல்யமான ஆப்பிள் ஐ பேட் போன்ற பொருட்களின் விலையை குறைத்துவிட்டு, ஆனால் அந்த பொருட்கள் விற்று தீர்த்துவிட்டதாக கடைகள் கூறியுள்ளது.
இதனால் ஆப்பிள் ஐ பேட் வாங்க என்று கடைக்கு வந்தவர்கள், அது விற்று தீர்ந்துவிட்டதால் வேறு பொருட்களை வாங்கிச் சென்றுள்ளார்கள். எப்படி பார்த்தாலும் எல்லாக் கடைகளும் பெரும் லாபம் ஈட்டியுள்ளார்கள் என்பதே உண்மை நிலை ஆகும். எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்று பாருங்கள் ?
http://www.athirvu.com/newsdetail/1549.html

No comments:

Post a Comment