Thursday, November 27, 2014

அவுஸ்திரேலியா சிட்னியில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்!



அவுஸ்திரேலியா சிட்னியில் மாவீரர் நினைவுவெழுச்சி நாள் மிகவும் சிறப்பாகவும் எழுச்சியுடனும் நடைபெற்றது.
முதல் நிகழ்வாக தமிழர்களின் தேசியக் கொடி ஏற்றலுடன் தாயக கீதம் இசைக்க, மிகவும் உணர்ச்சியோடு ஆரம்பிக்கப்பட்டது.
தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் இந் நிகழ்வில் பல ஆயிரக்ணக்கில் மக்கள் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டார்கள்.
தமிழர் விடுதலைக்காக தம் உயிரைத் துச்சமென மதித்து வீராச்சாவைத் தழுவிக்கொண்ட போராளிகளை நினைவு கூரும் கார்த்திகை 27 மாவீரர் நாள் நிகழ்வுகள் இன்று உலகத் தமிழர்களால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே, இன்று மாவீரர்நாள்.
தமிழீழத்தின் தேசியநாள். எங்கள் தங்கத் தலைவனின் மடியிலே, எமது விடுதலை இயக்கத்தின் முதல் மாவீரன் லெப்.சங்கர் தன்னுயிரைத் துறந்த நாள்.
எமது விடுதலை வானில் விண்மீன்களாய், நித்தமும் நீங்காதொளிரும் புனிதர்களாம் மாவீரர்களை, தம்முயிரை அர்ப்பணித்துத் தரணியிலே தமிழினத்தைத் தலைநிமிர வைத்த மான மறவர்களை, இவ்வுலகெங்கும் பரந்துள்ள தமிழரெல்லோரும் தம் நெஞ்சம் நெகிழக் கண்கள் பனிக்க மலர்தூவிச் சுடரேற்றி வழிபடும் திருநாள்.
தமிழீழத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களில் அமைக்கப்பட்டிருந்த நுளைவு வாசல் போன்று, மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்ட நுளைவு வாசல் ஊடாக, நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் யாவரும், மாவீரர்துயிலும் இல்ல வளாகத்தினுள் உணர்வுபூர்வமாக வந்து கலந்துகொண்டார்கள்.
தமிழீழத்தில் எதிரிகள் எங்கள் மாவீரர்கள் துயிலும் இல்லங்களை அழித்தாலும், எமது உள்ளத்தில் இருக்கும் உணர்வுகளை என்றுமே அழிக்கமுடியாது என்பதை எடுத்துக்காட்டியது.
எந்நாளும் எம் தீபங்கள் மண் ஆளும் காலம் மிக விரைவில்.... இன்றைய நாள் உலகெங்கும் துடிக்கும் தமிழ் உள்ளங்களின் மகத்தான நாள்.........ஒரு காலம் உருவாகும், மடிந்துள்ள மொட்டுக்களின் நிலை, மாறும் நாள் மிக விரைவில்....
http://www.tamilwin.com/show-RUmszBRbKZns7.html

No comments:

Post a Comment