Monday, November 24, 2014

மஹிந்தவை சந்திக்க சென்ற 47 தமிழ் யுவதிகளை பாலியல்வல்லுறவுக்குட்படுத்திய இராணுவம்!!

November 24th, 2014
மஹிந்தவை சந்திக்க சென்ற 47 தமிழ் யுவதிகளை பாலியல்வல்லுறவுக்குட்படுத்திய இராணுவம்
சிவில் பாதுகாப்புபடைப் பிரிவில் கடமையாற்றுகின்ற முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 47 தமிழ் யுவதிகளை கடந்த 22 ஆம் திகதி மிகிந்தலை என்ற இடத்தில் வைத்து மஹிந்த ராஜபக்ஷ சந்தித்த பின்னர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு மஹிந்த ராஜபக்ஷ முல்லைத்தீவில் கடமையாற்றுகின்ற சிவில் பாதுகாப்பு படைப்பிரிவைச் சேர்ந்தவர்களை கடந்த சனிக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடி தனக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களை நிற்பந்திக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
மஹிந்தவின் சந்திப்பிற்குப் பின்னர் அங்கு களியாட்ட நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. இக்களியாட்ட நிகழ்வில் முல்லைத்தீவில் கடமையாற்றுகின்ற சிவில்பாதுகாப்பு படைப்பிரிவைச் சேர்ந்த யுவதிகளையும் கலந்துகொள்ளுமாறு நிற்பந்தித்துள்ளனர். இதனால் அந்த யுவதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
இக்களியாட்ட நிகழ்வில் தேவையான மதுபானமும் சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் மதுபோதை தலைக்கேறிய நிலையில் சிவில் பாதுகாப்பு படைப்பிரிவைச் சேர்ந்த சிங்கள ஆண்கள் தமிழ் யுவதிகளுடன் பாலியல் ரீதியான தொடர்பினை ஏற்படுத்த முற்பட்டுள்ளனர். இதனைத் தூண்டும் வகையில் அந்த நிகழ்வு இடம்பெற்ற மைதானத்தில் பிரமாண்டமான திரைகளில் கூசிழிவான திரைப்படங்களும் காண்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஒருசில தமிழ் பெண்கள் சிங்கள ஆண்களுக்கு இடம்கொடுத்துள்ளதாகவும் அதனால் அந்த நிகழ்வில் வைத்து 47 தமிழ் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் மறுநாள் ஞாயிற்றுக் கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு தொடர்பில் அக்கறைகொள்ளாத இராணுவ உயர் அதிகாரிகள் இவ்வாறான சம்பவங்கள் இதுபோன்ற களியாட்ட நிகழ்வுகளில் சகசமாக இடம்பெறுவனவே எனவும் தெரிவித்துள்ளனர் என பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவத்தினால் தமக்கு சமுகத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதற்காக தம்மால் இச்சம்வம் தொடர்பாக வெளிப்படையாகப் பேசமுடியவில்லை எனவும் இப்பெண்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.unnamed
http://ttnnews.com/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-47/

No comments:

Post a Comment