Friday, November 21, 2014

லண்டன் "தேம்ஸ்" நதியில் பிணத்தை போட்ட நபர்: அதிகாலை 3 மணிக்கு துரத்திப் பிடித்த பொலிசார் !

லண்டனில் உள்ள தேம்ஸ் நதிக்கரையில், பிணத்தைக் கொண்டு வந்து தள்ளிவிட்டு தப்பிச் சென்ற 50 வயது நபரே இவ்வாறு பொலிசாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். அதிகாலை சுமார் 3.00 மணியளவில் தனது காரில் வந்து தேம்ஸ் நதிக் கரையில் இறங்கிய இன் நபர், ஒரு பிணத்தை தூக்கிச் சென்று நதியில் வீசுவதை ஒருவர் பார்த்துவிட்டார். அவர் உடனடியாக பொலிசாரை தொடர்புகொண்டு இத்தகவலை தெரிவித்துள்ளார். அதிகாலை வேளை என்பதனால் வீதியில் கார்கள் நடமாட்டம் மிகவும் குறைவாக இருந்துள்ளது. நாலா புறமும் சுற்றி அலைந்த பொலிசார் இறுதியில் அவரை கைதுசெய்தார்கள். இதேவேளை அவர் நதிக்குள் எறிந்தது பிணத்தை தானா என்ற சந்தேகம் எழுந்தது.
சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார், பிணத்தை மீட்டுள்ளார்கள். கைதான 50 வயது நபருக்கு உதவினார் என்று குற்றஞ்சுமத்தி பொலிசார் மேலும் ஒரு பெண்ணை இரவோடு இரவாக கைதுசெய்துள்ளார்கள் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. லன்டன் புறநகர்ப் பகுதியான  Thornton Heath என்னும் இடத்தில் தான் கொலை நடைபெற்றுள்ளது என்றும், பின்னர் 8 மைல் தொலைவில் உள்ள Deptford Wharf என்னும் தேம்ஸ் நதிர்க்கரையில் பிணத்தை அவர் வீசியுள்ளார் என்றும் பொலிசார் குறிப்பிட்டுள்ளார்கள்.

No comments:

Post a Comment