Friday, November 28, 2014

லண்டனில் பாடசாலைகளை தாக்க ஆரம்பிக்குமா எபொல்லா வைரஸ்: 2 சிறுமிகளால் பெரும் பதற்றம் ?

மேற்கு ஆபிரிக்காவில் தற்போது சுமார் 5,000 பேரை கொன்று, மரண தாண்டவம் ஆடிவரும் எபொல்லா வைரஸ் லண்டன் பாடசாலைகளுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காரணம் என்னவென்றால் ஆபிரிக்க இனத்தவர்கள் தற்போது கூட தமது சொந்த நாடடுகளுக்கு விடுமுறைக்காக சென்று திரும்புகிறார்கள். எபொல்லா என்னும் கொடிய வைரஸ் மேற்கு ஆபிரிக்க நாடுகளை தாக்குகிறது என்று, கொஞ்சம் கூட கணக்கில் எடுக்காமல் பல ஆபிரிக்க நாட்டவர்கள் தமது சொந்த ஊர்களுக்கு சென்று பின்னர் லண்டன் திரும்புகிறார்கள். மேலும் நேற்றைய தினம் இவ்வாறு ஆபிரிக்கா சென்று லண்டன் திரும்பிய குடும்பத்தில் இருந்த 2 சிறுமிகளுக்கு திடீர் காச்சல் ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவமனையில் தனி இடத்தில் வைத்து அவர்களை பரிசோதித்து வருகிறார்கள். இச் சிறுமிகள் பாடசாலை சென்றார்களா ? அவர்கள் எந்த பாடசாலையில் எந்த வகுப்பில் கல்வி கற்கிறார்கள் என்பதுபோன்ற தகவல்களை அவர்கள் திரட்டிவருகிறார்கள். பரிசோதனைகளை நடைபெற்று வரும் நிலையில், இன்னும் அறிக்கை வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது. இதுபோல மேலும் பல ஆபிரிக்க நாட்டவர்கள், தமது கிருஸ்மஸ் விடுமுறைக்கு சொந்த நாட்டிற்குச் செல்ல திட்டமிட்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.
இவர்கள் கிறிஸ்துமஸ் முடிய, மீன்டும் லண்டன் வரும்வேளை பாரிய ஆபத்துக்களை கொண்டுவரலாம் என்று எதிர்வு கூறப்படுகிறது. எமது பிள்ளைகளுக்கும் இன் நோய் தோற்றும் அபாயம் உள்ளது. எனவே தமிழர்கள் இதுதொடர்பாக உங்கள் பிள்ளைகளோடு உரைடாடுவது நல்லது. கிறிஸ்துமஸ் முடிவடைந்து, அடுத்த ஆண்டு பள்ளி ஆரம்பமாகும் வேளையில் மக்கள் மத்தியில் இதுதொடர்பான விழிப்புணர்வுகள் இருப்பது நல்லது.

No comments:

Post a Comment