Tuesday, November 25, 2014

லண்டனில் பல்கனியில் வைத்து கோடரியால் 10 தடவை வெட்டிய இளைஞர்கள்: வெள்ளை இனத்தவர் பலி !

லண்டன் ஹெயில் என்னும் நகரில் உள்ள தொடர்மாடி குடியிருப்பில் நடந்த கொலை தொடர்பான தீர்ப்பு நேற்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது. கோடரியால் சுமார் 10 தடவை வெட்டி ஒரு வெள்ளையினத்தவரை 3 இளைஞர்கள் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த பெபிரவரி மாதம் மூன்று 18 வயது இளைஞர் சேர்ந்து வெள்ளை இனத்தவர் ஒருவரை கோடரியால் வெட்டியும், மற்றும் கத்தியால் குத்தியும் கொலை செய்துள்ளார்கள். போல் டிவர் என்னும் 46 வயது நபரே இவ்வாறு கொல்லப்பட்டவர் ஆவார். இம்மூவரும் குற்றவாளிகள் என ஓல்-பெயிலி நீதிமன்றம் நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சம்பவ தினத்தன்று போல் நன்றாக குடிபோதையில் இருந்துள்ளார். அவரது காதலி, வீட்டுக்கு வந்து 3 இளைஞர்கள் தன்னைப் பழித்ததாகவும், தன் மீது ஒரு சிறிய கோலா கேனை எறிந்ததாகவும் முறைப்பாடு செய்துள்ளார். இதனை கேட்ட போல் சீறி எழுந்து வெளியே சென்று அங்கே நின்றிருந்த 3 இளைஞர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் அவர் அருகில் உள்ள கண்ணாடி ஒன்றையும் கையால் உடைத்து அந்த இளைஞர்களை பயமுறுத்த நினைத்துள்ளார்.
ஆனால் நிலமை வேறு மாதிரி திரும்பிவிட்டது. சின்ன வயது இளைஞர்கள்தானே என்று போல் நினைத்துக்கொண்டு இருக்க, அவர்களில் ஒருவர் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த கோடரியை எடுத்து பின்புறமாக குத்தியுள்ளார். இதனால் போல் நிலை தடுமாறி குப்பை தொட்டி ஒன்றின் மீது விழுந்துள்ளார். இருப்பினும் அவர் எழுந்து கோடரியை எடுத்து அவர்களை மிரட்ட , பின்னால் நின்ற மற்றுமொரு இளைஞர் கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளார். இன் நிலையில் அந்த இளைஞர் நெஞ்சிலும் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் நிலை தடுமாறி ரத்தவெள்ளத்தில் விழுந்த போல் அவ்விடத்திலேயே இறந்துபோனார்.
போலிடம் இருந்து தம்மை காப்பாற்றிக்கொள்ளவே தாம் இவ்வாறு செய்தோம் என்றும், இது ஒரு தற்பாதுகாப்பு நடவடிக்கையே என்றும் 3 பேரினது வக்கீல் நீதிமன்றில் வாதிட்டார். ஆனால் நீதிபதி அதனை ஏற்கவே இல்லை. இவர்கள் மூவரும் கொலையாளிகள் என்று நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கியுள்ளார். இவர்களுக்கான தண்டனைக் காலம் எவ்வளவு என்பது தொடர்பான இறுதித் தீர்ப்பு 19ம் திகதி டிசம்பர் மாதம் வழங்கப்படும் என்று நீதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/1511.html

No comments:

Post a Comment