Thursday, October 30, 2014

அமெரிக்க விமானத்திற்குள் அல்கொய்தா WI-FI நெட்வொர்க்!- பயணிகள் பீதி, விமானம் ரத்து !


அமெரிக்காவில் இருந்து லண்டன் புறப்பட்ட இருந்த விமானத்தில் அல்கொய்தா பெயரில் வை-பை நெட்வொர்க் இருப்பது தெரியவந்ததால், அந்த விமானமே ரத்து செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து லண்டனுக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராகியுள்ளது. அப்போது பயணி ஒருவர் தனது செல்போன் வை-பையை ஆன் செய்துள்ளார்.
அந்த பகுதியில் எந்தெந்த WI-FI  நெட்வொர்க்குகள் இருக்குமோ அவையெல்லாம் மொபைல் திரையில் தென்பட்டுள்ளன. அதில் ஒரு நெட்வொர்க் பெயர் 'அல்கொய்தா ஃப்ரீ டெரர் நெட்வொர்க்' என்று இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அந்த பயணி, யாரோ தீவிரவாதி ஒருவரும் இந்த விமானத்தில் பயணியை போல ஏறியிருக்க வேண்டும், அவரது செல்போன் ஹாட்ஸ்பாட் பெயர்தான் இப்படி இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.
இதுகுறித்து நைசாக விமான பணியாளர் கவனத்துக்கும் கொண்டு சென்றார். இந்த நிகழ்வுகள் எல்லாம், விமானம் புறப்பட சில நிமிடங்களுக்கு முன்பாக நிகழ்ந்துள்ளது. இதையடுத்து விமானி விமானத்தை கிளப்பாமல் அங்கேயே நிறுத்திவிட்டு பாதுகாப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக பயணிகளின் எலக்ட்ரானிக் பொருட்கள் அனைத்தும் சுவிட்ச் ஆப் செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டன. விமானத்தை ஏர்போர்ட்டில் தனியாக ஒரு இடத்துக்கு கொண்டு சென்று, தீவிர சோதனை நடத்தப்பட்டது. 3 மணி நேரத்துக்கு பிறகும் எந்த ஒரு சந்தேகப்படும் பொருளோ, நபரோ கிடைக்கவில்லை. இருப்பினும் விமான பயணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு பயணிகள் திருப்பியனுப்பப்பட்டனர்.

No comments:

Post a Comment