Tuesday, October 28, 2014

கறுப்பு பண முதலைகளின் பகீர் வாக்குமூலங்கள்!

வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக மத்திய அரசு 3 பேரின் பெயர்களை உச்ச நீதிமன்றத்தில் அளித்துள்ளது.
அதில், தபார் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் பிரதீப் பர்மன், குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரைச் சேர்ந்த பங்கஜ் லூதியா என்ற மற்றுமொரு வியாபாரி மேலும் கோவா மாநிலத்தைச் சேர்ந்த ராதா எஸ்.திம்ப்லு ஆகியோர் ஆவார்.
இந்நிலையில் இதுகுறித்து இவர்களில் ஒருவரான ராதா தரப்பில் கூறப்படுவதாவது, கோவா மாநிலத்தில் ஆண்டுதோறும் அதிக வரி செலுத்துவோர் பட்டியலில் தவறாமல் இடம் பிடிப்பவர் ராதா.
அப்படியிருக்கும்போது வரி ஏய்ப்பு செய்ததாக அவரது பெயர் பட்டியலில் இடம் பிடித்துள்ளது ராதாவுக்கு மட்டுமல்ல அவரது குடும்பத்தார் மற்றும் கோவா மாநில மக்களில் பெரும்பாலானோருக்குமே அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
இதுகுறித்து நிருபர்கள் ராதாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தை முழுமையாக படித்து பார்த்துவிட்டு அதன்பிறகு விளக்கமாக ஒரு அறிக்கை வெளியிடுகிறேன். அதுவரை இதில் எதுவும் சொல்வதற்கில்லை என்று கூறியுள்ளார்.
தொழில் அதிபர் பங்கஜ் சிமன்லால் லோதியா கூறியதாவது, எனக்கு வெளிநாட்டில் வங்கி கணக்கே இல்லை. அப்படி இருக்கையில் கருப்பு பணம் வைத்திருப்பதாக வந்த செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment