இஸ்லாமிக் ஸ்டேட் உலகின் மிகப்பெரிய பணக்கார தீவிரவாத இயக்கமாக உருவெடுத்துள்ளது. கறுப்பு சந்தையில் எண்ணெய் விற்பனை, மிரட்டி பணம் பறித்தல் மூலம் மாதத்திற்கு சுமார் 10 மில்லியன் டாலர்களை பெறுகிறது. என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிரியா, ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பெரும்பாலான பகுதியினை பிடித்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். உலகுக்கே அச்சுறுத்தலாக விளங்கி வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்கா தலைமையில் உலக நாடுகள் கூட்டு தாக்குதல்கள் நடத்தி வருகின்றது. ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியா மற்றும் ஈராக்கில் பல்வேறு எண்ணெய் கிணறுகளை தங்கள்வசம் கொண்டுவந்துள்ளனர். அங்கிருந்து பெறப்படும் கச்சா எண்ணெய் விற்பனை மூலம் தீவிரவாத இயக்கம் நாள் ஒன்றுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் பெறுகிறது என்று அமெரிக்க பயங்கரவாதம் மற்றும் நிதி உளவுப்பிரிவு செயலாளர் டேவிட் கோஹன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இந்த உளவுப்பிரிவு தீவிரவாத இயக்கங்களின் நிதி ஆதாரங்களை அழிப்பதற்கானது.
மற்ற தீவிரவாத இயக்கங்களவைவிட இவ்வியக்கம் பல்வேறு வழிகளில் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் செல்வத்தைக் குவித்து வருகிறது. இது அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. “நம்மிடம் சில்வர் புல்லட் இல்லை, தீவிரவாத இயக்கத்தின் பொக்கிஷத்தை ஒருஇரவிலே காலியாக்கும் இரகசிய ஆயுதம் நம்மிடம் இல்லை. இது நீடித்த போராட்டமாக இருக்கும், நாம் தற்போது ஆரம்ப நிலையில் உள்ளோம்.” என்று டேவிட் கோஹன் தெரிவித்துள்ளார்.
ias