Monday, October 27, 2014

பெற்ற மகளை கருணைக் கொலை செய்யும் தாய்! நெஞ்சை உருக்கும் சம்பவம் (வீடியோ இணைப்பு)

பிரித்தானியாவில் தாயார் ஒருவர் கடுமையான பல குறைபாடுகளுடன் இருந்த தனது 12 வயது குழந்தையை கருணை கொலை செய்ய நீதிமன்றத்தின் அனுமதி பெற்றுள்ளார்.
பிரித்தானியாவில் டேவிட் மற்றும் சார்லோட் என்ற தம்பதியரின் மகளான நான்சி பிறக்கும் போதே கண் பார்வையில்லாமலும் எதையும் உண்ணவும், குடிக்கவும் முடியாத நிலையில் பிறந்துள்ளார்.
மேலும் அந்த குழந்தைக்கு மூளைக்காய்ச்சல், ஹைட்ரோசிபாலஸ்(Hydrocephalus), செப்டிகேமியா(Septicaemia) போன்ற நோய்கள் இருந்ததோடு பேசும் திறன் மற்றும் நடக்கும் திறனும் இல்லை.
இதனால் மருத்துவமனையில் 24 மணி நேரமும் நான்சியை பராமரிக்கவும், ஒரு குழாயின் மூலம் அவளுக்கு தண்ணீர் மற்றும் உணவையும் தாயார் சார்லோட் அளித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தொடர் சிகிச்சையினால் நான்சி வேதனையில் கதறுவதை தாங்கமுடியாத அர்ப்பணிப்புமிக்க தாயான சார்லோட், ஒருகட்டத்தில் தன் மகளை பராமரிப்பதை விட்டதோடு நான்சியின் வாழ்க்கையை முடிக்கவேண்டும் என்ற கடின முடிவையும் எடுத்துள்ளார்.
இதையடுத்து பெற்றோர்கள் இருவரும் கடந்த ஆகஸ்ட் மாதம், நீதிமன்றத்தில் தங்கள் மகள் இறப்பதற்கு உரிமை அளிக்கவேண்டுமென கேட்டு மனுதாக்கல் செய்துள்ளனர்.
சார்லோட் எழுதிய 324 வார்த்தைகள் கொண்ட அந்த அறிக்கையில், நான்சி இனி மகள் இல்லை, அவள் வெறும் கூடு தான். அவள் கண்களில் இருந்த ஒளி இப்போது இல்லை, அதற்கு பதிலாக அவள் கண்களில் பயமும் அமைதிக்கான ஏக்கமும் தான் இருக்கிறது.
அவள் இதுவரை தாங்கிய வலியே போதும். இதை சொல்லும் போதே என் இதயம் உடைகிறது, ஆனால் நான் இதை சொல்லித்தான் ஆகவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இதனை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, அந்த தாயாரின் கோரிக்கையை ஏற்று அந்த குழந்தையின் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவர பெற்றோருக்கு அனுமதி அளித்துள்ளார்.
இந்த உத்தரவையடுத்து நான்சிக்கு குழாய் மூலம் அளிக்கப்படும் உணவு எதுவும் வழங்கப்படாததால் அடுத்த 14 நாளில் அவர் உயிரிழப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment