Wednesday, October 29, 2014

உயிருடன் இருக்கும் பெண் போராளி: போலியான புகைப்படங்களால் ஏமாற்றிய ஐ.எஸ்.ஐ.எஸ் (வீடியோ இணைப்பு)!

குர்திஷ் பெண் போராளியின் தலையை துண்டித்து கொன்றதாக ஐ.எஸ்.ஐ.எஸ், சில போலியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிரியாவின் எல்லைப்பகுதியில் உள்ள கோபேனி (Kobane) நகரை கைப்பற்றுவதில் ஐ.எஸ்.ஐ.எஸ் மும்முரமாக உள்ளதால் அவர்களை எதிர்த்து அப்பகுதியை சேர்ந்த குர்து இனப் பெண்கள் நீண்ட நாட்களாய் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் குர்திஷ் பெண் போராளிகளில் மிக முக்கியமாக கருதப்படுகின்ற ரெஹேனா (Rehana) என்பவரை ஐ.எஸ்.ஐ.எஸ் உயிருடன் சிறைப்பிடித்து, தலையைத் துண்டித்து கொன்றதாக தீவிரவாதிகளின் தரப்பில் சில புகைப்படங்கள் வெளியிட்டப்பட்டது.
ஆனால் இதை முற்றிலுமாக மறுத்த குர்திஷ் பெண் படையினர் கூறுகையில், ரெஹேனா இன்னும் உயிருடன் தான் இருக்கிறாள் என்றும் எங்களையும், சமூகத்தையும் திசைதிருப்பி அச்சுறுத்தும் நோக்கிலேயே ஐ.எஸ்.ஐ.எஸ் சில அதிர்ச்சியூட்டும் புகைப்படங்களை வெளியிட்டு ஏமாற்றியுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment