Thursday, October 23, 2014

உலகின் செம ஹாட்டான ஆண் இவர் தானாம் (வீடியோ இணைப்பு) !

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் பிரபஞ்சத்தின் ஆண் அழகன் என்ற பட்டத்தை பெற்றுள்ளார்.
கடந்த மாதம் பெரு(Peru) நாட்டில் நடந்த பிரபஞ்ச ஆணழகன் போட்டியில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரூபன் லோபஸ்(Ruben Lopez Age-22) என்ற நபர் பங்கேற்று முதல் இடத்தை பிடித்துள்ளார்.
ஸ்பெயின் இராணுவத்தில் பணியாற்றி வரும் இவர் தன்னுடன் போட்டியிட்ட 40 சக அழகர்களை தோற்கடித்து பிரபஞ்சத்தின் ஆண் அழகன் என மகுடம் சூட்டப்பட்டுள்ளார்.
இதுகுறித்து இவர் கூறுகையில், இந்த பட்டத்தை பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என்றும் தொடர்ந்து இராணுவத்திலேயே பணியாற்றுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
உடற்கல்வி படிப்பை படித்துவரும் இவர், நடிகராகவும் திகழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்தாண்டு ஸ்பெயினில் நடந்த அழகு போட்டியில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment