Wednesday, October 29, 2014

ஹரினுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய ஜனாதிபதி! ரணிலைப் பாதுகாக்க கோரிக்கை !

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொலைபேசி மூலம் ஊவா மாகாண எதிர்க்கட்சித் தலைவர் ஹரின் பெர்னாண்டோவிற்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ஹரின் பெர்னாண்டோவின் 38வது பிறந்த தினமாகும். இதன்போது ஜனாதிபதி அவருக்கு தொலைபேசி வழியாக பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
அதன் பின்னர் தொடர்ந்தும் ஹரினுடன் உரையாடிய ஜனாதிபதி, ரணில் விக்கிரமசிங்கவைப் பாதுகாக்க முன்னின்று செயற்படுமாறு ஹரினிடம் வலியுறுத்தியுள்ளார்.
இதுவரை காலமும் ஐக்கிய தேசியக் கட்சியை ரணில் விக்கிரமசிங்க பாதுகாத்து வந்துள்ளதாகவும் ஜனாதிபதி அதன் போது சுட்டிக் காட்டியுள்ளார். தேவையேற்படின் ரணிலைப் பாதுகாக்கும் விடயத்தில் தானும் உதவுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஹரின் எதுவித பதிலும் தெரிவிக்காமல், ஜனாதிபதியின் வாழ்த்துக்கு மட்டும் பதிலுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszARdKXkq5.html

No comments:

Post a Comment