Saturday, October 25, 2014

பழங்குடியினரை ஏமாற்றி ஆவணப்படம்: பிரபல சினிமா இயக்குநரின் சூழ்ச்சி (வீடியோ இணைப்பு)

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த திரைப்பட இயக்குநர் அந்தமானில் வசிக்கும் பழங்குடியிரை ஏமாற்றி ஆவணப்படம் எடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
பிரான்ஸை சேர்ந்த அலெக்ஸாண்டர் டெரிம்ஸ் (Alexandre Dereims) என்ற திரைப்பட இயக்குநர் அந்தாமானின் மாயமந்தர் என்ற தீவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து ஆவணப்படம் எடுத்துள்ளார்.
படம் ஏதும் எடுக்கக் கூடாது என விதியை மீறிய இவர், அங்குள்ள ஜரவா (Jarawa) என்று அழைக்கப்படும் பழங்குடியினருக்கு உணவளிப்பதாக கூறி ஏமாற்றி ஆவணப்படம் எடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அந்த தீவிற்கு படகில் இவரை அழைத்துச் சென்றவர்கள் உள்பட 4 பேர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து பொலிசார் கூறுகையில், இந்த விவகாரத்தில் இயக்குநர் அலெக்ஸாண்டருக்கு அவரது தயாரிப்பாளர் கிலேரி பெலிவெர்ட்டும் (Claire Beilvert)உறுதுணையாக இருந்ததால் அவரும் குற்றம்சாட்டப்பட்டுள்ளார் என்றும் இவர்களின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் நிரூபணமானால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
http://newsonews.com/view.php?22cMM403JOece25nBdb220Mbd2o8Eec2PBL043AlR2236AI3

No comments:

Post a Comment