Wednesday, October 29, 2014

கார் ஓட்டுனர்கள் சிக்னலில் கைப்பேசி பயன்படுத்தலாம்! நீதிமன்றம் அதிரடி !

ஜேர்மனி நாட்டில் கார் ஓட்டுனர்கள் வாகனம் ஓட்டாத நேரங்களிலும், சிக்னலில் நிற்கும்போதும் கைப்பேசியை பயன்படுத்தலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜேர்மனியின் வடக்கு ரையின் வெஸ்ட்பாலியா (North Rhine-Westphalia) நகரத்தை சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் சிக்னலில் கைப்பேசி உபயோகப்படுத்தியதை அடுத்து 40 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த இளைஞர் உயரநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுகுறித்து இளைஞர் கூறுகையில், கார் சிக்னலில் ஓடாமல் நின்று கொண்டிருந்ததாகவும், தான் விதிமுறைகள் எதையும் மீறவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வாகனத்தின் மோட்டார் ஓடாமல் அணைந்திருக்கும்போது கைப்பேசி உபயோகப்படுத்தலாம் என்ற விதிமுறை இருப்பதால் வழக்கு இளைஞருக்கு சாதகமாக அமைந்துள்ளது. 

No comments:

Post a Comment