Friday, October 24, 2014

பலவீனமான நிலையில் மகிந்த !

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னர் எப்போதையும் விட தற்போது அரசியல் ரீதீயாக பலவீனமான நிலையிலுள்ளதாக தெரிவித்துள்ள அரசியல் ஆய்வாளர் அலன்கீனன்-அவரின் தேர்தல் பிரச்சாரம் பெருமளவிற்;கு சிங்கள தேசியவாதத்தை மையப்படுத்தியே அமையப்போகின்றது, மிகவும் விலைகொடுத்து பெறப்பட்ட வெற்றியை தன்னாலேயே உறுதிப்படுத்த முடியும் எனவும்-மேற்குலகிலும் உள்நாட்டிலும் உள்ள சதிகாரர்களின் ஆதரவுடன் விடுதலைப்புலிகளுக்கு புத்துயிர் கொடுப்பதற்க்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை தன்னாலேயே தடுக்க முடியும் எனவும் அவர் தெரிவிக்கப் போகிறார் என குறிப்பிட்டுள்ளார்.

டிடபில்யூ.டிஈ செய்திச்சேவைக்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்;ள சர்வதேச நெருக்கடி குழுவை சேர்ந்த ஆய்வாளர் அலன்கீனனின் பேட்டி வருமாறு
கேள்வி—ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஏன் இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே தேர்தல் ஒன்றிற்க்கு அழைப்பு விடுக்கவேண்டும்?
பதில்– சமீபத்தில் இடம்பெற்ற மாகாணசபை தேர்தல்களில் கிடைத்துள்ள முடிவுகள் குறித்து, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், அவரது ஆலோசகர்களும் கவலையடைந்துள்ளனர் போல தோன்றுகின்றது,
செப்டம்பர் மாதம் இடம்பெற்ற ஊவா மாகாணசபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சிறிய பெரும்பான்மையையே பெற்றுள்ளது. முன்னர் இடம்பெற்ற தேர்தல்களுடன் ஒப்பிடும்போது அதன் வாக்குகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி ஆச்சரியப்படத்தக்க விதத்தில் வெற்றிகரமான தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சவே வெற்றிபெறுவதற்கான உறுதியான வாய்ப்புள்ளபோதிலும்,ராஜபக்ச தேர்தலை பிற்போட்டால் அது அவரது வெற்றியை பாதிக்கும் என்பது அனேக ஆய்வாளர்களின் கருத்தாகஉள்ளது.
கேள்வி- ராஜபக்சவின் ஆதரவு ஏன் குறைந்து வருகின்றது?
பதில்- வாழ்க்கை செலவு உயர்வு மற்றும் சமாதானம் மூலமாக உரிய பலாபலன்கள் கிடைக்காதது குறித்த அதிருப்தி அதிகரித்துவருகின்றது, சீனா மற்றும் இந்தியாவின் உதவியுடன் யுத்தத்திற்க்கு பின்னரான பாரிய உட்கட்டமைப்பு திட்டங்கள் பல முன்னெடுக்கப்படுகின்ற போதிலும்.ராஜபக்ச குடும்பத்தினர் உட்பட்ட அரசதரப்பினரிடையே ஊழல் என்பது உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
அரசாங்கத்தின் சகல மட்டங்களிலும்,ஆளும் கட்சியினரால் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்த கரிசனைகளாலும் ஜனாதிபதியின் ஆதரவில் வீழ்ச்சியேற்பட்டுள்ளது.
ராஜபக்சாவிற்க்கு தமிழர்கள் மத்தியில் என்றும் ஆதரவு இருந்ததில்லை,பௌத்த குழுக்கள் முஸ்லீம்களுக்கு எதிராக முன்னெடுக்கும் வன்முறையுடன் கூடிய எதிர்ப்பு பிரச்சாரத்தை தடுப்பதற்க்கு முயலாமல் அரசாங்கம் சகித்துக்கொண்டுள்ளதால் அந்த சமூகத்தினர் மத்தியிலும் ஜனாதிபதிக்கான ஆதரவு குறைவடைந்துவருகின்றது.
கேள்வி- ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாக தேர்தலில் போட்டியிடலாமா குறித்து சர்ச்சைகள் தோன்றியுள்ளதே- இது குறித்து உங்கள் கருத்தென்னஃ
பதில்–ராஜபச்ச அரசாங்கத்தினால் 2010 செப்டம்பரில் கொண்டுவரப்பட்ட 18 வது திருத்தம்,ராஜபக்சாவிற்க்கு இரண்டு தடவை தான் போட்டியிடலாம் என்ற தடையை நீக்கவில்லை-எதிர்கால ஜனாதிபதிகளுக்கே அது பொருந்தும் என சட்டநிபுணர்கள் வாதிடுகின்றனர்.
அவ்வேளை 18 வது திருத்தத்தை நிறைவேற்றிய ராஜபக்சாவின் கட்டுப்பாட்டின் கீழிருந்த பாராளுமன்றம்-அவர் மூன்றாவது தடவையும் போட்டியிடலாம் என தெளிவாக நம்பியது, இதேவேளை இந்த விடயத்தில் இலங்கை உச்சநீதிமன்றம்-ராஜபக்ச போட்டியிடுவதற்க்கு எதிராக தீர்ப்பளிக்கும் அல்லது கருத்து கூறும் என எவரும் இலங்கையில் எதிர்பார்க்காத நிலையே காணப்படுகின்றது.
தற்போதைய பிரதமநீதீயரசர் ஜனாதிபதி மீது வெளிப்படுத்தும் விசுவாசம் நன்கு அறியப்பட்டவிடயம்.முன்னாள் பிரதம நீதீயரசர் மிகவும் சர்ச்சைக்குரிய விதத்தில் பதவிநீக்கம் செய்யப்பட்ட பின்னர் 2013 இல் இவர் பதவியில் அமர்த்தப்பட்டார்.
கேள்வி- ராஜபக்சவிற்க்கு எதிராக யார் போட்டியிடப்போகின்றனர்-அவர் வெல்வதற்கான வாய்ப்புகள் எவ்வாறுள்ளன?
பதில்- பலவருடங்களில் முதற்தடவையாக ராஜபக்ச அரசியல் ரீதீயாக பலவீனமான முறையில் உள்ளார் என தோன்றுகிறது-
எனினும் எதிர்க்கட்சிகள் தமக்குள் பிளவபட்டுள்ளதுடன் தமது தந்திரோபாயம் குறித்து தெளிவில்லாத நிலையில் உள்ளன.
எதிர்க்கட்சிகளை, நிறைவேற்று அதிகார முறையை ஒழிக்கும்- அரசமைப்பபு மாற்றங்களை மேற்கொள்ளும் பொது வேலைதிட்டத்தின் கீழ் இணைக்கும் -பொதுவேட்பாளர் குறித்த பொதுக்கருத்தை ஏற்படுத்துவதற்கான,முயற்சிகள் இடம்பெறுகின்றன.
முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தன்னுள் பிளவுபட்டுநிற்கின்றது, அது தனது சொந்த வேட்பாளரை நிறுத்த விரும்புவது போல் தோன்றுகிறது-இது எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்தும்-மூன்று-நான்கு வேட்பாளர்கள் ராஜபக்சாவிற்க்க எதிராக போட்டியிடலாம்.
கேள்வி-இலங்கையில் தேர்தல்கள் எவ்வாறு நடைபெறுகின்றன-
பதில்–முதலாவது வாக்களிப்பில் எந்தவேட்பாளருக்கும் தெளிவான வெற்றி கிடைக்காத பட்சத்தில்-தேர்தல் இரண்டாம் சுற்றிற்க்கு செல்லும்- இலங்கையில் இது ஒருபோதும் நடைபெற்றதில்லை.
இரண்டாவது சுற்றிற்க்கு தேர்தல்சென்றால் ஏற்கனவே வன்முறை மிகுந்ததாக அமையப்போகின்ற இலங்கை தேர்தல்களை இது மேலும் வன்முறைமிகுந்ததாக்கும் என்ற அச்சங்களும் காணப்படுகின்றன.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் அவரது வலுவான குடும்பமும் இலகுவில் அதிகாரத்தை விட்டுகொடுக்க மாட்டார்கள் என்பதே பல ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
கேள்வி-தேர்தல் சிறுபான்மை தமிழர் மீதும். நல்லிணக்க முயற்சிகள் மீதும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்;-
பதில்- ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரம் பெருமளவிற்க்கு சிங்கள தேசியவாதத்தை மையப்படுத்தியே அமையப்போகின்றது, மிகவும் விலைகொடுத்து பெறப்பட்ட வெற்றியை தன்னாலேயே உறுதிப்படுத்த முடியும் எனவும்-மேற்குலகிலும் உள்நாட்டிலும் உள்ள சதிகாரர்களின் ஆதரவுடன் விடுதலைப்புலிகளுக்க புத்துயிர் கொடுப்பதற்க்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை தன்னாலேயே தடுக்க முடியும் எனவும் அவர் தெரிவிக்கப்பபோகிறார்.
சுயாதீன ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் மீதான தற்போதைய ஒடுக்குமுறைகள் மேலும் தீவிரமடையலாம்-குறிப்பாக வடகிழக்கில் பணியாற்றுபவாகள் மீதான ஒடுக்கமுறைகள்.
தமிழ் மக்களின் தெரிவுசெய்யப்பட்ட பிரதநிதிகளுடன் பேச்சுக்கள் மீண்டும் ஆரம்பமாவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக உள்ளன,
கேள்வி-தேர்தல்கள் பரிசுத்த பாப்ரசரின் இலங்கை விஜயத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துமா?
பதில்-தனது விஜயங்கள் அரசியல்மயப்படுத்தப்படுவதை தவிர்ப்பதற்காக தேர்தல் நடைபெறும் வேளைகளில் குறிப்பிட்ட நாட்டிற்க்கு விஜயம் மேற்கொள்வதை பாப்பரசர் தவிர்ப்பது வழமை-இலங்கையில் தேர்தல்கள் ஜனவரி 10 திகதி நடைபெறலாம் என்பது ஒரளவிற்க்கு உறுதியாக தெரிகின்ற சூழ்நிiயில்.(ஜனாதிபதியின் ஜோதிடரால்குறிக்கப்பட்ட திகதி) பரிசுத்த பாப்ரசரின் விஜயம் மீளதிட்டமிடப்பட வேண்டியது என்றே தோன்றுகிறது.
http://www.jvpnews.com/srilanka/84843.html

No comments:

Post a Comment