Wednesday, October 29, 2014

வானில் பறந்த 6 நொடிகளில் வெடித்து சிதறிய ரொக்கெட்: அதிர்ச்சியில் உறைந்த நாசா (வீடியோ இணைப்பு)

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை எடுத்து செல்ல புறப்பட்ட அமெரிக்க ஏவுகணை ஒன்று வெடித்து சிதறியுள்ளது.
அமெரிக்காவின் கிழக்கு வெர்ஜினியாவில் (Virginia) உள்ள நாசா ஏவு தளத்திலிருந்து, நேற்று மாலை 6.22 மணிக்கு கிளம்பிய ஆண்டெரஸ் (Antares) என்ற ஆளில்லா ஏவுகணை பயங்கர சத்ததுடன் வெடித்துள்ளது.
சுமார் 5,055 பவுண்ட்ஸ் எடை கொண்ட இந்த ஏவுகணை உபகரணங்களோடு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டபோது, திடீரென விபத்துக்குள்ளதானதில் தீப்பிழம்புகள் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது.
மேலும் விண்ணில் ஏவுகணை பாய்ந்த 6 நொடிகளிலேயே, எதிர்பாராதவிதமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
தற்போது இது தொடர்பாக விசாரணை நடத்த நாசா உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே இந்த விபத்து நாசாவின் ஆய்வாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment