Friday, October 31, 2014

எதிரிநாட்டு சீரியலை பாக்குறீங்களா? 50 பேர் கொடூரமாய் படுகொலை (வீடியோ இணைப்பு) [

தென் கொரியாவிலிருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர்களை பார்த்ததற்காக வட கொரியாவில் 50க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
வட கொரியாவில் தென் கொரிய நாட்டு திரைப்படங்கள், காணொளி பதிவுகள் மற்றும் மெமரி கார்டுகள் உள்ளிட்ட பல பொருட்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அங்கு தென் கொரிய நாட்டு வானொலிகள் போன்ற சாதனங்கள் கள்ளச்சந்தை வழியாக விற்கப்படுகின்றன.
இதனை தடுக்க பல வகையான நடவடிக்கைகள் அங்கு எடுக்கப்பட்டு வந்தாலும், தென் கொரிய படங்கள் அங்கு மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகின்றன.
இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டில் தென் கொரிய தொலைக்காட்சி தொடர்களை இணையம் வழியாக விதிமுறைகளை மீறி பார்த்ததற்காக பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இவர்கள் அனைவரும் பொது இடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டதாக தென் கொரிய உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் தலைமையில் நடக்கும் கொடுங்கோல் ஆட்சியில் நடந்த இந்த கொடூர செயலால் அதிர்ச்சியில் உறைந்த அந்நாட்டு மக்கள், இச்சம்பவத்திற்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment