Saturday, October 25, 2014

கணவரின் பெற்றோருடன் பிரச்சினை! 2 குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை!

இரண்டு பிள்ளைகளுடன் தனது கணவரின் பெற்றோரின் வீட்டில் வசித்து வந்த இளம் தாய் ஒருவர், தனது பிள்ளைகளுடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கணவரின் பெற்றோருடன் ஏற்பட்டிருந்த வாழ்க்கை போராட்டம் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது.
34 வயதான ஹெனா சோலங்கி(Heena Solanki) என்ற இந்த இளம் தாய் மேற்கு லண்டனில் ரஷ்லிப்(Ruislip) என்ற இடத்தில் உள்ள அவர்களின் வீட்டில், கடந்தாண்டு தனது 9 வயதான ஜெஸ்மின்(Jasmine) மற்றும் 4 வயதான பிரிஷா(Prisha) ஆகிய குழந்தைகளுடன் படுக்கையில் இறந்து கிடந்துள்ளார்.
பொலிஸார் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் சென்று பார்வையிட்ட போது நச்சு புகைக்காணப்பட்டுள்ளது.
எனினும் தனது மனைவியின் இந்த செயல் தனக்கு ஆச்சரியமளிப்பதாக பெண்ணின் கணவரான கல்பேஷ் சோலங்கி(Kalpesh Solanki) தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ஹெனா இறப்பதற்கு முன்னர் சந்தோஷமாக வாழ்ந்ததாகவே தான் எண்ணியதாகவும், ஜெஸ்மின் மற்றும் பிரிஷா ஆகிய தமது பிள்ளைகளுடன் நல்ல முறையில் வாழ்ந்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனது பெற்றோருடன் நாங்கள் வசித்து வந்ததால் மனைவி மகிழ்ச்சியற்று இருந்திருக்கலாம் என நான் எண்ணுகிறேன்.
நாங்கள் பெற்றோரின் வீட்டில் இருந்து சென்று வெளியில் குடியிருக்க முடிவு செய்திருந்தோம். ஆனால் அதனை நாங்கள் பெற்றோரிடம் கூறவில்லை எனவும் கல்பேஷ் சோலங்கி குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை ஹெனாவுக்கு அவரது மாமனாரிடம் இருந்து பிரச்சினைகள் இருந்தாகவும் அவரது நண்பி ஒருவர் கூறியுள்ளார்.
மேலும், ஒருமுறை தனக்குள்ள பிரச்சினைகள் பற்றி தன்னிடம் கூறி அழுததாகவும், தனது பிள்ளைகளுடன் இந்தியாவிற்கு சென்று வாழ வேண்டும் எனக் கூறுவார் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இந்த மரணம் குறித்து விசாரணைகளை நடத்திய மேட்ரோபொலிட்டன் பொலிஸார், இந்த சம்பவத்தில் மூன்றாம் தரப்பு சம்பந்தப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.
மரணம் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்து கிடைந்த தற்கொலைக்கான குறிப்புகள் எதுவும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை.
பிரேத பரிசோதனை அறிக்கையில் போதைப் பொருள் காரணமாக மூன்று இந்த இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஹெனா சோலங்கி தனது சொந்த வாழ்க்கையை முடித்து கொண்டாலும் ஜெஸ்மின் மற்றும் பிரிஷா ஆகிய பிள்ளைகள் சட்டவிரோதமாக கொல்லப்பட்டுள்ளனர்.
இரண்டு பிள்ளைகளும் சிறந்த தேக ஆரோக்கியத்தை கொண்ட மகிழ்ச்சியான பிள்ளைகள் என அவர்கள் படித்த பாடசாலையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் பிரச்சினைகள் இருந்தாலும் அதனை வெளிக்காட்டாது இந்த பிள்ளைகள் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment