Tuesday, September 23, 2014

ஐபோன் மோகத்தால் கடவுளை நிராகரித்த மக்கள்!

அமெரிக்காவை சேர்ந்த ஏராளமானோர் தங்களது கைப்பேசியில் ஐபோன் இயக்க அமைப்பு நிறுவுவதற்காக, புனித பைபிள் நூல் பயன்பாட்டினை நீக்கியுள்ளனர்.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோனிற்கு புதிய இயக்க அமைப்பு ஒன்றை கடந்த 18ம் திகதி வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த இயக்க அமைப்பை தங்களது கைப்பேசியில் வைத்துக்கொள்ள 4.6GB இடம் வேண்டும் என கூறியிருந்தது.
இதனால் மக்கள் இதனை தங்களது கைப்பேசியில் நிறுவுவதற்காக, கைப்பேசியில் இருந்த சில புகைப்படங்கள், மற்ற சில பயன்பாட்டுக்கள் அழித்தது மட்டுமின்றி கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளையும் நீக்கியுள்ளனர்.
அவ்வாறு பைபிள் பயன்பாட்டை நீக்கிய நபர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் “கடவுளே என்னை மன்னியுங்கள்” என கூறியுள்ளார். இதேபோல் இவரை தொடர்ந்து பலரும் எழுதியுள்ளனர்.

No comments:

Post a Comment