Wednesday, September 24, 2014

துட்பேஸ்டில் குண்டு தயாரித்த முக்கிய தீவிரவாதி அமெரிக்க குண்டு வீச்சில் காலி !


அமெரிக்கா , பிரான்ஸ் ஆகிய நாடுகளின் விமானப்படையினர் இணைந்து, ஈராக்கில் நிலைகொண்டுள்ள ISIS தீவிர்வாதிகள் நிலைகள் மிது கடும் தாக்குதலை நடத்திவருகிறார்கள். நேற்று இரவும் பாரிய தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் துட்பேஸ்டில் குண்டுகளை தயாரித்து, அதனை அமெரிக்காவுக்கு அனுப்பி வெடிக்கவைத்த சூத்திரதாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக ISIS அறிவித்துள்ளது. அல்கைடா தீவிரவாத இயக்கத்தின் ஒரு பிரிவான கொரானா என்னும் இயக்கத்தில் இருந்த ஒரு தலைவரே இவ்வாறு கொல்லப்பட்டு உள்ளார்.
துருக்கி நாட்டில் இருந்து வந்த அமெரிக்க விமானங்கள் நடத்திய தாக்குதலில் தான் இன் நபர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் துருக்கி அதனை மறுத்துள்ளது. தமது நாட்டு விமானத்தளத்தை அமெரிக்கா பாவிக்க தாம் அனுமதிக்கவில்லை என அன் நாடு மேலும் தெரிவித்துள்ளது. இருப்பினும் அமெரிக்காவுக்கு மறைமுகமாக துருக்கியே உதவிவருகிறது. இது உறுதிசெய்யப்பட்டால், அல்கைடா தீவிரவாதிகள் துருக்கி மீது தாக்குதல் நடத்துவார்கள். இதன் காரணமாகவே துருக்கி இதனை மறுத்துள்ளது என்று கூறப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாட்டு விமானப்படைகளின் அதி சக்திவாய்ந்த விமானங்களே நேற்று தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக ஏஜன்சி செய்திகள் தெரிவித்துள்ளன. இரவு நேரத்தில் துல்லியமாக தாக்கவல்ல விமானங்கள் இத்தாக்குதலில் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.




No comments:

Post a Comment