Thursday, September 25, 2014

மைக்கிறோ வேவில் ஆப்பிள் ஐபோனைப் போட்டால் சார்ஜ் ஆகும்: போனை இழந்த பலரின் சோகம் !

சமையல் அறையில் உணவைச் சூடாக்கும் மைக்கிறோ அவனில் ஐபோபை வைத்தால் பற்றரி சார்ஜ் ஆகிறது என்ற வதந்தி இன்ரர் நெட்டில் தீயாகப் பரவி வருகிறது. இதுபோல ஏற்கனவே ஐ.ஒ.எஸ் 7.00 ஐ அப்டேட் செய்தால் தண்ணீரில் போட்டால் கூட ஐபோன் பழுதாகாது என்ற வதந்தியை நம்பி பலர் தமது ஐபோபை தண்ணீரில் போட்டு பார்த்தார்கள். தற்போது பரவியுள்ள வதந்தியை நம்பி சிலர் தமது ஐபோனை மைக்கிறோ அவனில் வைத்து சூடாக்கிப் பார்த்துள்ளார்கள். இவ்வாறு செய்த அனைவரது போனும் வெடித்து எரிந்துவிட்டது. காசைக் கரியாக்குவது என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதனை இப்படி தான் பார்கலாம் போல இருக்கிறது.
அதிலும் குறிப்பாக ஐபோன 6 இன் பற்றரிகளை சார்ஜ் செய்ய, மைக்றோ அவனில் போட்டு சிறிது நேரம் சூடாக்கினால் போதும். அது முழு அளவில் சார்ஜ் ஆகிவிடும் என்று இனரர் நெட்டில் வதந்திகள் வந்தது. இதனை நம்பி பலர் தாம் புதிதாக வாங்கிய ஐபோன் 6 மைக்றோ அவனில் போட்டு சூடாக்கியுள்ளார்கள் என்றால் பாருங்களேன். ஐபோன 6 தற்போது சுமார் 600 பவுன்களுக்கு விற்கப்பட்டு வருகிறது. காசு கொடுத்து வாங்கி கரியாக்கியவர்கள் பலர். இதனால் இப்படிச் செய்யவேண்டாம் செய்தால் உங்கள் போன் எரிந்து நாசமாகிப்போய்விடும் என்று ஆப்பிள் நிறுவனமே செய்தி வெளியிடும் அளவு நிலைமை சீரியசாக மாறிவிட்டதாம்.
http://www.athirvu.com/newsdetail/1079.html

No comments:

Post a Comment