Saturday, September 20, 2014

கூட்டமைப்புடன் பேசுவதற்கு இலங்கை அரசு முன்வரவேண்டும்! பா.ஜ.க

இலங்கை அரசு தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுக்களை ஆரம்பிக்கவேண்டும். இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பா.ஐ.க. தலைவர்கள் இருவர். வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை சந்தித்து பேசியபோதே அவர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

பாரதிய ஐனதாவின் பொதுச்செயலாளர் முரளீதர் ராவ் மற்றும் அக் கட்சியின் சர்வதேச பிரிவைச் சேர்ந்த விஜய் ஜொலி ஆகியோரே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

இந்த சந்திப்பின் போது இருவரும் பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் பாராட்டியுள்ளனர். இலங்கை அரசாங்கம் வாக்குறுதியளித்தபடி 13 ஆவது திருத்தத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும்.

இலங்கையில் நிரந்தர சமாதானம் நிலவுவதற்கு இதுவே அவசியமானது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்திய மீனவர்களின் நலன்களைப் பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தையும் இந்தச் சந்திப்பில் அவர்கள் வலியுறுத்தினர் என்றுதெரிவிக்கப்படுகிறது.
20 Sep 2014

No comments:

Post a Comment