Thursday, September 18, 2014

கார் ஆக்சிடன் ? ஆனால் செட் டப்: தமிழர்களின் அதிரும் தகவல் !

பிரித்தானியப் பொலிசாருக்கு பசி எடுத்தால் .. மக் டொனால்ஸ் பெர்கர் மன்னர் இவர் தான் !

[ Sep 18, 2014 01:45:17 PM | வாசித்தோர் : 5025 ]
ஐரோப்பா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில், கார் பார்கில் ஊனமுற்றவர்கள் காரை பார்க் செய்ய என இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் ஒரு முக்கியமான விடையமும் கூட. அந்த இடத்தில் வேறு வாகனங்களை பார்க் செய்வது சட்டப்படி குற்றமாகும். இதனை பிரித்தானிய அரசு கண்டிப்பான முறையில் அமுல்படுத்தியும் வருகிறது. இன் நிலையில், லண்டனில் உள்ள மக் டொனால்ஸ் உணவகத்தின் வெளியே உள்ள , இதுபோன்ற ஊனமுற்றவர்களுக்கு உரிய பார்கிங் இடத்தில் தனது காரை பார்க் செய்துள்ளார். பொலிசார். இது அவசர தேவைக்காக பார்க் செய்யப்படவில்லை.
மக் டொனால்சுக்கு சென்று பேர்கரை வாங்கிவரவே இந்த ஆபிசர் இவ்வாறு பிழையான இடத்தில் மற்றும் பார்க் செய்ய கூடாத இடத்தில் தனது பொலிஸ் காரை பார்க் செய்துள்ளார். இதனை ஒருவர் அப்படியே படம் எடுத்து ஊடகம் ஒன்றுக்கு கொடுத்துவிட்டார். சும்மா விடுமா பிரித்தானிய ஊடகங்கள். வைத்து மாறுகால் மாறு கை வாங்கிவிட்டார்கள். தற்போது குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் கமிஷனர் கூறும் அளவு விடையம் சீரியசாக போய்விட்டது என்கிறார்கள்.
மக் டொனால்ஸ் பேர்கரை சாப்பிட்டு வாழ்ந்தவர்கள் கோடான கோடி அப்பா !
http://www.athirvu.com/newsdetail/1012.html

கார் ஆக்சிடன் ? ஆனால் செட் டப்: தமிழர்களின் அதிரும் தகவல் !

[ Sep 18, 2014 02:27:49 PM | வாசித்தோர் : 11700 ]
லண்டனில் மட்டும் சுமார் ஒரு நாளைக்கு 500 போலியான, வாகன விபத்து விண்ணப்பங்கள் வருவதாக இன்சூரன்ஸ் கம்பெனிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பல நாட்டைச் சேர்ந்தவர்கள் இதில் இருக்கிறார்கள் என்றும் அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதிர்வு இணையம் எடுத்த புலனாய்வு தகவல்கள் அதிர்சியை தருகிறது. வாருங்கள் விடையத்திற்குச் செல்லலாம் !
இங்கிலாந்தில் பல இனத்தவர்கள் வாழ்கிறார்கள். குற்றச்செயல் புரிபவர்களில் இவர்களும் அடங்குகிறார்கள் என்பது வருத்தமான செய்தி. இருப்பினும் இந்தியர்கள் இலங்கையர்கள் இங்கிலாந்து நாட்டிற்கு குடியேறி தமது வணிகத்தைப் பெருக்கி, இல்லையேல் படிப்பால் உயர்ந்து நல்ல நிலையில் உள்ளார்கள். ஆனாலும் அதில் சிலர் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கவும் நினைக்கிறார்கள். ஈழத் தமிழர்கள் சிலர் பாக்கிஸ்தான் நாட்டவர்களோடு இணைந்து பெரும் வாகன இன்சூரன்ஸ் மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அது என்ன என்று கேட்டாலே தலை சுற்றும். ஒரு காரை நீங்கள் வாங்கிப் பாவித்தால் சில வருடங்களில் அதன் விலை குறைந்துவிடும் அல்லவா. அத்தோடு அதில் சிறிய திருத்தவேலைகளும் வரலாம். மேலும் கார் இயங்காமல் கூட போகலாம்.
இவ்வாறு இருக்கும் கார் ஒன்றை, வீதியில் வைத்து தனது நண்பர் ஒருவர் மூலமாக மோதிக்கொள்கிறார்கள். வேண்டும் என்றே ஆக்சிடன் (விபத்து) ஒன்றை உருவாக்குகிறார்கள். குறித்த விபத்து நடக்கும் வேளை காரில் குறைந்தது 4 பேராவது இருப்பார்கள். இவர்கள் அனைவருமே தமக்கு, கார் விபத்து காரணமாக கழுத்தில் நோ ஏற்பட்டுள்ளது என்று சொல்லிவைத்தால் போல் கூறுவார்கள். சம்பவ இடத்திற்கு வரும் பொலிஸ் மற்றும் அம்பூலன்ஸ் பிரிவினர் இதனை பதிவுசெய்யவேண்டும் என்றே இப்படி கூறுகிறார்கள். பின்னர் மருத்துவரிடம் சென்று காட்டி அதற்கான பத்திரத்தையும் பெறுகிறார்கள். பின்னர் இடித்தவரின் இன்சூரன்ஸ் கம்பெனியில் இருந்து இந்த 4 பேருக்கும் கழுத்து நோவுக்கான பெருந்தொகைப் பணம் கிடைக்கிறது. அது தலா 2000 பவுன்ஸ் இல் இருந்து 3000 பவுன்ஸ் வரை இருக்கும்.
அத்தோடு அவர்களது காருக்கான விலையையும், இடித்தவரின் இன்சூரன்ஸ் கம்பெனி கொடுத்துவிடுகிறது. இது இவ்வாறு இருக்க இந்த இடித்த நபர் யார் என்று கேட்கிறீர்களா ? அவர் வேற்று நாட்டவராக இருப்பார். உதாரணமாக பாக்கிஸ்தான், றொமேனியா, போலந்து நாடு இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த நாட்டு ஆசாமிகளை பிடித்து , அவர்களுக்கு ஒரு பழைய காரை வாங்கிக்கொடுத்து நல்ல இன்சூரன்ஸையும் போட்டுக்கொடுக்கிறார்கள் சில தமிழ் குழுக்கள். பின்னர் அவர்கள் யாரை சுட்டுவிரலால் காட்டுகிறார்களோ, அவர்களின் காரை இந்த நபர் பின்னால் சென்று இடிப்பார். முட்டி மோதி காரை திருத்த முடியாத அளவு சேதப்படுத்துவார். இது பரவலாக நடைபெற்று வருகிறது. இதுபோக மேலும் ஒரு சுவாரஸ்யமான விடையமும் உள்ளது.
அதுதான் காரை அப்படியே மறையச் செய்வது:
அதாவது வாங்கி பல வருடங்களான காரை , ஆபிரிக்க நாட்டவர்கள் ஊடாக காணமல்போகச் செய்தல். இந்த ஆபிரிக்க நாட்டவரே வந்து உங்கள் காரை எடுத்துச் சென்றுவிடுவார். அவர் அந்தக் காரை, அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்வார். சக்கரங்கள், கார் சீட், உட்பட அனைத்து பாகங்களையும் பிரித்து தனித்தனியாக விற்றுவிடுவார். இறுதியில் காரை வெட்டி எடுத்து துண்டு துண்டாக்கியும் விடுவார். இப்படி ஒரு கார் இருந்தது ? என்ற அடையாளமே தெரியாமல் போகும் அளவு அவர் கைவேலை இருக்கும். இதேவேளை காரின் உரிமையாளர், காரைக் காணவில்லை என்று ரெம்பவும் பெளத்திரமாக பொலிசாரிடம் கூறிவிடுவார். இதனால் அவரது இன்சூரன்ஸ் கம்பெனி, காருக்கான முழுத்தொகையையும் கொடுத்துவிடும். இப்படி பல தரப்பட்ட Fraud லண்டனில் நடந்து வருகிறது.
ஆனால் இவர்களுக்கு எல்லாம் தெரியாத விடையம் என்று ஒன்று உள்ளது. லண்டனில் நூற்றுக்கணக்கான தனியார் மற்றும் அரச இன்சூரன்ஸ் கம்பெனிகள் இருக்கலாம். இறுதியில் இவை அனைத்தையும் கட்டுப்படுத்துவது ஒரு நிறுவனமே ஆகும். அவர்கள் வருடாந்தம் தமது லாப நஷ்ட கணக்கைப் பார்த்து, கம்பெனி நஷ்டத்தில் ஓடினால் அடுத்த வருடம் இன்சூரன்ஸ் பிரீமியத்தை அதிகரிக்கிறார்கள். இதனால் குற்றம் எதுவும் செய்யாத அப்பாவிகளே பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். சிலவேளை நீங்கள் கவனித்து இருக்கக்கூடும், பல வருடங்களாக நீங்கள் விபத்தில் சிக்காமல் காரை ஓட்டி இருக்கலாம். ஆனால் வருடந்தோறும் உங்கள் இன்சூரன்ஸ் பணம் அதிகரித்துக்கொண்டே செல்லும். ஏன் என்று இப்போது உங்களுக்கு புரியும் என நாம் நினைக்கிறோம்.
அதிர்வுக்காக:
கண்ணன்.
http://www.athirvu.com/newsdetail/1013.html

No comments:

Post a Comment