Saturday, September 27, 2014

பேச்சுவாக்கில் மகாராணி சொன்ன ரகசியத்தை நண்பருக்கு தெரிவித்த டேவிட் கமரூன் !

ஸ்கொட்லாந்து மக்கள் வாக்கெடுப்பு குறித்து எலிசபெத் மகாராணி தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்தொன்றை அமெரிக்காவில் கூறியமைக்காக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரன், மகாராணியிடம் மன்னிப்பு கோரியுள்ளார். ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை 69ஆவது அமர்வில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் நகரத்திற்கு விஜயம் செய்திருந்தபோது நியூயோர்க் நகர முன்னாள் மேயரிடம் தாம் தெரிவித்த கருத்துகளுக்காகவே பிரதமர் கமரன் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.
இங்கிலாந்திடம் இருந்து ஸ்கொட்லாந்து பிரிந்துசென்று தனித்துச் செயற்படுவது குறித்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பிரிந்து செல்வதற்கு மக்கள் எதிராக வாக்களித்திருந்தனர். இது குறித்து எலிசபெத் மகாராணி மகிழ்ச்சியடைந்ததாக நியூயோர்க் நகர முன்னாள் மேயரிடம் பிரதமர் கமரூன் தெரவித்திருந்தார். நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த இருவருக்கு இடையிலான உரையாடலை கமராக்களில் பதிவுசெய்துகொண்ட அமெரிக்க ஊடகவியலாளர்கள் தொலைக்காட்சிகளில் விசேட செய்தியாக ஒளிபரப்பியிருந்தனர். டேவிட் கமரூன் மகாராணியுடன் பேசிவிட்டு அவர் சொன்ன சில விடையங்களை தனது நண்பருக்கு பேச்சுவாக்கில் அப்படியே தெரிவித்தும் விட்டார்.
எவ்வாறாயினும் ஸ்கொட்லாந்து தொடர்பாக இவ்வாறானதொரு கருத்தை உத்தியோகபூர்வதாக தாம் வெளியிட்டிருக்கவில்லை என, பிரித்தானிய எலிசபெத் மகாராணி கூறியுள்ளார். மேலும் இது குறித்து பிரதமரின் ஊடகப் பேச்சாளரிடம் பக்கிங்ஹம் மாளிகை விசாரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எலிசபெத் மகாராணியிடம் கருத்து கேட்காமல் இவ்வாறானதொரு கருத்தை பிரசித்தமான இடத்தில் வெளியிட்டமைக்காக மகாராணியிடம் பிரதமர் டேவிட் கமரன் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/1091.html

No comments:

Post a Comment