Sunday, September 28, 2014

பெருந்தொகை வெளிநாட்டு பணத்தை கடத்த முயற்சித்தவர் கைது (செய்தித் துளிகள்)



ரணில்- சஜித் ஒற்றுமை! விருப்பமின்றிச் செய்த திருமணம் போன்றது: ஜே.வி.பி
[ ஞாயிற்றுக்கிழமை, 28 செப்ரெம்பர் 2014, 03:43.56 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியில் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ ஒன்றுபட்டமை என்பது, விருப்பமில்லாமல் செய்து வைத்த திருமணத்தைப் போன்றது என ஜேவிபி தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த திருமணத்தில் கலந்து கொண்டவர்களும் கூட விருப்பமின்றியே சமூகமளித்திருந்தனர் என ஜே.வி.பியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க, சிங்கள வார இதழுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
ரணிலின் நோக்கம் வேறு, சஜித் பிரேமதாஸவின் நோக்கம் வேறு. எனினும், சஜித்தை பயன்படுத்தி அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டு முன்னுக்குச் செல்ல வேண்டும் என ரணில் விரும்புகின்றார்.
ரணிலை எப்படியாவது தோல்வியடையச் செய்து அதிகாரத்தைக் கையில் எடுப்பது சஜித்தின் முனைப்பாகவுள்ளது.
இருவருடைய நோக்கங்களும் நேரெதிரானவை. இதனால், தலைவர்கள் கைபிடிப்பதனால் மாத்திரம் கட்சிக்குள் சமாதானத்தைக் கட்டியெழுப்ப முடியாது.
எமது பிரச்சினை ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உள்ள சமாதானமல்ல. ஐக்கிய தேசியக் கட்சி எதிர்பார்க்கும் பொருளாதார கொள்கையை தற்போதைய ராஜபக்ஷ அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
இதனால், அரசாங்கத்தை வெல்லும் பிரச்சினைக்கு அவர்களால் தீர்வு வழங்க முடியும் என நாம் கருதவில்லை.
சிறந்த மாற்று பொருளாதார கொள்கை இல்லாதவர்களுடன் கூட்டுச் சேர்வது சாத்தியமில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJRcKVhq7.html
பெருந்தொகை வெளிநாட்டு பணத்தை கடத்த முயற்சித்தவர் கைது (செய்தித் துளிகள்)
[ ஞாயிற்றுக்கிழமை, 28 செப்ரெம்பர் 2014, 04:52.55 AM GMT ]
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயத் தாள்ளை எடுத்துச்செல்ல முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
45 லட்ச ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்கள் சட்டவிரோதமான முறையில் எடுத்துச் செல்ல முற்பட்டதாக, அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த நபரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.
இந்தப் பணத்தை சந்தேக நபர் சிங்கப்பூருக்கு எடுத்துச் செல்ல முயற்சித்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
43 வயதான கொழும்பைச் சேர்ந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பொலிஸார் போல் நடித்து பொருட்களை கொள்ளையிட்ட நபர்கள் கைது
பொலிஸ் அதிகாரிகள் என்ற போர்வையில் சொத்துக்களை கொள்ளையிட்டு விற்பனை செய்யும் மோசடி வியாபாரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
வத்தளை, பள்ளம, வென்னப்புவ, மாரவில ஆகிய பகுதிகளில் இந்த மோசடி வியாபாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த வியாபாரத்துடன் தொடர்புடைய 8 பேர் அண்மையில் நீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
இந்த நபர்கள் தம்மை பொலிஸார் எனக் கூறி துப்பாக்கிகளை காட்டி அச்சுறுத்தி பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 86 கிராம் தங்கம், கைக்கடிகாரம், கையடக்க தொலைபேசி மற்றும் இலங்கையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
றோயல் கல்லூரி அருகில் பாதாள உலக தலைவரின் சடலம்
கொழும்பு வெல்லம்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த பிரபல பாதாள உலக தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வெல்லம்பிட்டியே சூட்டி என்ற இந்த நபர் வெல்லம்பிட்டி பிரதேசத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த பாதாள உலக குற்றவாளி என தெரியவந்துள்ளது.
கொழும்பு றோயல் கல்லூரி அருகில் இவர் ஜீப் வண்டி ஒன்றில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.
சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இலவச பாடசாலை புத்தகங்களை விற்பனை செய்ய முயற்சித்த 3 போ் கைது
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டங்கல் தமிழ் வித்தியாலயத்தில் இருந்து மாணவர்களுக்கு வழங்கப்பட்ட குறித்த இலவச புத்தகங்களை அட்டன் பகுதியில் ஒரு வர்த்தக நிலையத்திற்கு வான் ஒன்றில் கொண்டு சென்ற சம்பத்தின் தொடர்புடைய 3 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டங்கல் பாடசாலையின் அதிபர் உட்பட இரண்டு பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த புத்தகங்களை ஒரு கிலோ 8 ரூபாய் படி விற்பனை செய்ய முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேற்படி புத்தகங்கள் மீண்டும் பாவிக்க முடியும் நிலையில் காணப்படுகின்றதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை இன்று ஹற்றன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment