Sunday, September 28, 2014

ஐ.எஸ்.ஐ.எஸ்களுக்கு எதிராக அணி திரளும் ஐரோப்பிய நாடுகள்

சமகாலத்தில் மிகவும் கொடூரமான தீவிரவாத அமைப்பாக உருவெடுத்து வரும் ஐ.எஸ்.ஐ.எஸ்-களை ஒழித்துக் கட்டுவதில் அமெரிக்கா தலைமையிலான கூட்டு நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக ஈராக்கில் அமெரிக்கா மட்டும் வான்தாக்குதல்களை நடத்தி வந்தது. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தனது போரில் உலக நாடுகள் ஒன்று திரண்டு கை கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அழைப்பு விடுத்தார்.
இதனையடுத்து பிரான்சு இதில் இணைந்து கொண்டது. அமெரிக்காவுடன் இணைந்து ஈராக்கில் பிரான்ஸ் போர் விமானங்கள் வான்தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
தனது நாட்டை சேர்ந்த சுற்றுலாப்பயணி, ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதரவு பெற்ற கலீபா வீரர்களால் அல்ஜீரியாவில் கொல்லப்பட்டதை அடுத்து அது ஈராக்கில் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், ஈராக்கில் அமெரிக்காவுக்கு ஆதரவாக இங்கிலாந்து களத்தில் நேரடியாக குதிக்கிறது. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் இணைந்து இங்கிலாந்து இணைந்து செயல்படுவதற்கு அந்த நாட்டு பாராளுமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பான பிரதமர் டேவிட் கேமரூனின் தீர்மானம் 542 உறுப்பினர்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றது. 43 பேர் மட்டுமே எதிர்த்து வாக்கு அளித்தனர். இதற்கு அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
இதேவேளை ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம் மற்றும் டென்மார்க்கும் அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட இணக்கம் தெரிவித்துள்ளன.

பெல்ஜியத்தின் ஆறு எப்-16 ரக போர் விமானங்கள் கிரேக்கத்தை சென்றடைந்தள்ளது. டென்மார்க்கும் போர்விமானங்களை அனுப்பி வைக்கவுள்ளது.
ஏற்கனவே சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான அமெரிக்க தாக்குதலில் அரபு கூட்டாளிகள் களம் இறங்கியுள்ள நிலையில், இப்போது ஈராக்கில் தாக்குதல் நடத்துவதற்கும் மேற்கத்திய நாடுகள் அணி சேர்ந்து இருப்பது ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு பெருத்த தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
http://newsonews.com/view.php?22cOl72bcO80Mb4e3SMM402dBnB2dd0nBnT303C6A42e4g08Secb3lOIc3

No comments:

Post a Comment