Sunday, September 21, 2014

பிரான்ஸ் நாட்டு விமானப்படை ஈராக்கில் தாக்குதல் !

பிரான்ஸ் நாட்டு விமானப்படையினர் முதல் தடவையாக ஈராக்கில் நேற்று தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளார். ஈராக்கில் நிலைகொண்டுள்ள ஐ.எஸ்-ஐஎஸ் நிலைகள் மீதே பிரான்ஸ் விமானப்படையினர் தாக்குதலை நடத்தியுள்ளார்கள். பிரான்சில் உள்ள 61 சதவீதமான மக்கள் ஈராக்கில் தாக்குதலை நடத்த அனுமதி அளித்துள்ளார்கள். உலகில் உள்ள குறிப்பிடத்தக்க சக்திவாய்ந்த விமானப்படைகளில் , பிரான்ஸ் நாட்டு விமானப்படையும் ஒன்றாகும். இவர்கள் இரவு நேரத்தில் தாக்குதல் நடத்துவதில் வல்லவர்கள் என்று கூறப்படுகிறது.
ஈராக்கில் உள்ள ஐ.எஸ்-ஐ.எஸ் நிலைகள் மீது பிரான்ஸ், நாட்டு விமானப்படை பாரிய தாக்குதலை இரவு நேரத்திலேயே நடத்தியுள்ளது. இதன் காரணமாக பாரிய இழப்பை அவ்வியக்கம் சந்தித்துள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. இதுவரை இதுதொடர்பாக அவ்வியக்கம் எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். ஐ.எஸ்-ஐ.எஸ் இயக்கம், ஈராக்கின் சில இடங்களில் கனரக ஆயுதங்களைப் பொருத்திவைத்துள்ளார்கள். இவை முன்னேறிச் செல்லும் அவ்வியக்கத்தவர்களை பாதுகாக்கிறது.
பல இடங்களில் குழி தோண்டி அதனுள் ஏவுகணைகளை அவர்கள் பொருத்திவைத்துள்ளார்கள். விமானத்தில் இருந்து பார்த்தால் தெரியாதவாறு சிறிய குன்றுகள் போல அவ்விடங்களை கமபிஃளாக் போட்டு உருமறைத்தும் உள்ளார்கள். இதனால் சாதாரண வேவு பார்கும் ஆளில்லா விமானத்தால் இவ்விடங்களை அவதானிக்க முடியாது. இதேவேளை இவர்கள் வேறு ஒரு விடையத்திலும் கில்லாடிகளாக உள்ளார்கள். பகலில் இவர்கள் பல இடங்களில் டயர்களை போட்டு எரித்துவிடுகிறார்கள். இதனால் புகைமண்டலம் கிளம்புகிறது. எனவே வானத்தில் பறக்கும் வேவு விமானத்தால் கீழ் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள மிகவும் கஷ்டமாக இருக்குமாம்.
இதன் காரணமாகவே இரவு நேர தாக்குதல் தான் சிறந்தது என்று பிரான்ஸ் நாட்டு விமானப்படை தீர்மானித்து, தனது திட்டத்தை தீட்டி தாக்குதல் நடத்தியுள்ளது என்று கூறப்படுகிறது. இதுவரை காலமும் அமெரிக்கா மற்றும் பிரித்தானிய பிரஜைகளை மட்டும் குறிவைத்து தாக்கிவந்த இந்த தீவிரவாதிகள், இனி பிரான்ஸ் நாட்டு குடிமக்களையும் குறிவைப்பார்கள் என்று எதிர்பார்கப்படுகிறது.
http://www.athirvu.com/newsdetail/1034.html

No comments:

Post a Comment