Tuesday, September 16, 2014

வெட்டிய தலையுடன் புகைப்படம்: பெண் தீவிரவாதியின் வெறிச்செயல் (வீடியோ இணைப்பு) !

ஐ.எஸ்.ஐ.எஸ்-யில் உள்ள பெண் தீவிரவாதி ஒருவர் நபர் ஒருவரின் வெட்டிய தலையை கையில் பிடித்த வண்ணம் புகைப்படம் எடுத்து, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
ஈராக்கின் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக வான்வழி தாக்குதலை நடத்த முடிவெடுத்துள்ள பிரித்தானிய பிரதமர் கேமரூன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை எச்சரிக்கும் வகையில், தீவிரவாதிகளால் அடுத்தடுத்து பிணைக்கைதிகளின் தலைதுண்டிப்பு நடந்து வருகின்றது.
இந்நிலையில் தீவிரவாதிகளின் கோரிக்கையை ஏற்று அந்த அமைப்பை சேர்ந்த உசாமா (Usama) என்ற பெண் தீவிரவாதி, வெட்டிய தலையுடன் புகைப்படம் எடுத்து அதை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய மருத்துவ கல்லூரி மாணவியான உசாமா என்ற இந்த பெண் தீவிரவாதி, சிரியாவில் உள்ள ரக்கா (Raqqa) நகரில் மருத்துவராக பணியாற்றி வருகிறார் என கூறப்படுகிறது.
மேலும் இந்த புகைப்படத்தில் உசாமாவுடன் இரு சிறுவர்கள் நின்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment