Tuesday, September 23, 2014

இவர் தான் உலகிலேயே செம 'ஸ்டைலிஷான' தடகள வீராங்கனையாமே ?


மாகி வெஸ்ஸி.. அமெரிக்க தடகள வீராங்கனை... 32 வயதாகும் இவர்தான் உலகிலேயே மிகவும் ஸ்டைல் லுக்குடன் கூடிய தடகள வீராங்கனை என்ற பெயரைப் பெற்றுள்ளார். இத்தனைக்கும் இவர் ஒருமுறை கூட ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றதில்லை. நடுத்தர ஓட்டப் பந்தய வீராங்கனையான இவர் இரண்டு முறை அமெரிக்கா சார்பில் உலக தடகளப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவர் பிரபலமானவரும் கூட இல்லை. ஆனாலும் இவருக்கு உலகிலேயே மிகவும் ஸ்டைலான வீராங்கனை என்ற பெயர் கிடைத்துள்ளது.
இதற்கு இவர் போட்டிகளின் போது அணியும் உடைதான் முக்கியக் காரணம். வழக்கமான வீராங்கனைகள் போல டிராக் சூட் போடுவதில்லை வெஸ்ஸை. மாறக பேஷன் அழகுடன் கூடிய அட்டகாசமான காஸ்ட்யூமில் வந்து கலக்குகிறார். கலிபோர்னியாவின் சோக்யூல் என்ற நகரைச் சேர்ந்தவர் வெஸ்ஸி. 800 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் பங்கேற்று ஓடி வருபவர். இவர் கலந்து கொள்ளும் போட்டிகளில் எல்லாம் இவரது ஓட்டத்தை விட இவர் அணிந்திருக்கும் டிராக் சூட்தான் அதிகம் பார்க்கப்படுகிறது, பேசப்படுகிறது.
வழக்கமாக வீராங்கனைகள் அணியும் உடைகளைப் போல இவர் அணிவதே இல்லை. மாறாக வித்தியாசமான டிசைனுடன் கூடிய உடைகளைத்தான் பார்த்துப் பார்த்துப் போட்டு அசத்துகிறார். இவருக்கான போட்டி உடைகளை டிசைன் செய்வதற்காகவே லாஸ் ஏஞ்சலெஸைச் சேர்ந்த மெர்லின் காஸ்டெல் என்பவரை நியமித்துள்ளார் வெஸ்ஸி.

No comments:

Post a Comment