சிறுவனால் பொறுக்க முடியவில்லை.
யு.எஸ்.-மினசோட்டாவைச் சேர்ந்த 3-வயது சிறுவன் ஒருவன் கடுமையான இராணுவ நெறிமுறையை மீறி ஓடிச்சென்று தன் தாயை கட்டி அணைத்துக் கொண்டது மிகவும் உணர்வுபூர்வமான காட்சியாக அமைந்தது. தேசிய காவலர் நாடு திரும்பும் வரவேற்பு அணிவகுப்பில் இக்காட்சி இடம்பெற்றது.
Kathryn Waldvogel  வெளியேறுவதற்காக வரிசையில் பொறுமையாக நின்று கொண்டிருந்த போது அவரது மகன் கூப்பர் விடயத்தை தனது சொந்த கையில் எடுத்துக்கொண்டான்.
இவனது தாயார் கடந்த 9-மாதங்களாக ஆப்கானிஸ்தானில் கடமையில் இருந்ததால் சிறுவனால் தாயாரை காண முடியவில்லை. தாயை கண்டதும் துருப்புக்கள் நின்ற இடத்தை நோக்கி ஓடியுள்ளான்.
ஓடிச்சென்று தாயை கைகளால் கட்டிப்பிடித்ததும் சீருடை அணிந்த சக அதிகாரிகள் நேரடியாக பார்க்க முடியாமலும் பலர் கண்ணீர் வடித்த நிலையிலும் காணப்பட்டுள்ளனர்.
அரங்க நிகழ்வுகளின் போது குடும்ப அங்கத்தவர்களுடன் அளவளாவுவது தடை செய்யப்பட்டிருந்த போதும் தனது உற்சாகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என 25-வயதுடைய Waldvogel கூறினார்.
18-மாதங்களிற்குப் பின்னர் முதல்தடவையாக தாய் தந்தையருடன் சேர்ந்து இருக்கின்றான். இவனது தந்தை அடமும் டிசம்பர் மாதம் ஆப்கானிஸ்தான சுற்றுலா ஒன்றை மேற்கொண்டு தற்போது நாடு திரும்பியுள்ளார்.
army
army1 army3