Wednesday, September 24, 2014

2 பொலிஸ்காரர்களின் கழுத்தைவெட்டுவேன்: பேஃஸ் புக்கில் போஸ்ட் போட்ட மாணவன் சுட்டுக்கொலை !


2 பொலிஸ்காரர்களின் கழுத்தை வெட்டுவேன் என்று பேஃஸ் புக்கில் போஸ்ட் போட்ட மாணவனை, அவுஸ்திரேலிய பொலிசார் சுட்டுக்கொன்றுள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது. அவுஸ்திரேலியாவில் உள்ள மெல்பேன் நகரில் கல்வி கற்றுவரும் 18 வயதே ஆன நூமான் என்னும் முஸ்லீம் இளைஞர் கடந்த சில வாரங்களாக, ISIS இயக்கத்துக்கு ஆதரவாக பேஃஸ் புக்கில், சில தகவல்களை வெளியிட்டு வந்துள்ளார். அத்தோடு ISIS அமைப்பின் கொடியையும் அவர் மெல்பேன் நகரில் உள்ள, ஷாப்பிங் சென்ரர் ஒன்றின் முன் பிடித்தபடி நின்றுள்ளார். இத் தகவல் பொலிசாருக்குச் செல்லவே. அவர்கள் குறித்த மாணவை தொடர்புகொண்டு பேச வருமாறு அழைத்துள்ளார்கள்.
இதற்காக அவர் பொலிஸ் நிலையம் வரவேண்டியது இல்லையென்றும், மாறாக தாம் அமைதியா ஒரு சூழலில் பேசலாம் என்றும் பொலிசார் கூறியுள்ளார்கள். இதற்கு அமைவாக கார் பார்க் ஒன்றில் பொலிசாரை சந்திக்க நூமான் ஒத்துக்கொண்டுள்ளார். இருப்பினும் அவர் 2 கத்திகளை வைத்திருந்துள்ளார். தன்னை சந்திக்க வரும் 2 பொலிசாரையும் கொலைசெய்து, அவர்களின் கழுத்தை வெட்டி ஒரு பாலித்தீன் பாக்கில் கட்டி அதனை எடுத்துச் சென்று, பின்னர் பேஃஸ் புக்கில் அதனைப் போட அவர் திட்டமிட்டுள்ளார் என்பது பின்பு தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 2 பொலிசார் நூமானைச் சந்திக்க சென்றுள்ளார்கள். அவர்களை திடீரென இந்த இளைஞர் கத்தியால் தாக்கியும் உள்ளார்.
இதேவேளை குறித்த இந்த இளைஞர் இவ்வாறு கொலைசெய்யதான் பொலிசாரை, கார் பார்கிற்கு அழைத்தார் என்பதனை பொலிசார் கண்டுபிடித்துவிட்டதால் அவர்கள் மேலதிக பொலிசாரை அவ்விடத்திற்கு அனுப்பிவைத்துள்ளார்கள். மேலும் இவ்விடையத்தை குறித்த நேரத்தில் அங்கே சென்ற பொலிசாருக்கும் தெரிவித்து இருந்தார்கள். இருப்பினும் தகவல் வந்துகொண்டு இருக்கும்போதே அந்த இளைஞர் பொலிசாரை தாக்க ஆரம்பித்துவிட்டார். இதனால் உதவிக்கு அங்கே வந்த பொலிசார் அவனை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்கள். இதனால் இளைஞர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டார். இவ்விடையம் அவுஸ்திரேலியாவை அதிரவைத்துள்ளது.


No comments:

Post a Comment