Monday, August 25, 2014

ISIS என்ற பெயரில் பெண்கள் அணியும் பிரா உற்பத்தி: தீவிரவாத அமைப்பு கடும் கண்டனம் !

இங்கிலாந்தில் உள்ளாடைகளை உற்பத்தி செய்யும் பிரபலமான நிறுவனம் ஐஎஸ்ஐஎஸ் என்ற பெயரில் உள்ளாடையொன்றை அறிமுகப்படுத்தியமைக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிறுவனம் புதிய வகை உள்ளாடையை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆடை நிறத்திலேயே வடிவமைக்கப்பட்டுள்ளமையால் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானியாவில் பெரும்புகழ்பெற்று விளங்கும் Ann Summers என்ற நிறுவனம் கடந்த மாதம் ஐஎஸ்ஐஎஸ் என்ற புதியவகை கறுப்பு உள்ளாடை வகையொன்றை அறிமுகப்படுத்தியது.
பெண்கள் அணியும் இந்த உள்ளாடையை £14 முதல் £50 வலை விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த உடைகள் கறுப்பு நிறத்தில் மட்டும் உற்பத்தி செய்யப்பட்டமையினால் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் சீருடை நிறம் கறுப்பு என்பதனால், தீவிரவாதத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த உடைகளுக்கு ஐஎஸ்ஐஎஸ் எனப் பெயரிடப்பட்டதாக Ann Summers விளக்கமளித்துள்ளது. தற்பொழுது இந்த பெயருக்கே ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐஎஸ்ஐஎஸ் என்பது எகிப்து நாட்டில் உள்ள இஸ்லாமிய கடவுள் ஒன்றின் பெயர் என்றும், அந்த பெயரை களங்கப்படுத்தும் விதமாக உள்ளடைக்கு அதே பெயரை வைத்திருக்கும் நிறுவனத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் கடும் எச்சரிக்கை செய்துள்ளது. இந்த பெயரை உடனடியாக மாற்றாவிட்டால் கடும் விளைவுகளை அந்த நிறுவனம் சந்திக்க நேரிடும் என ஐஎஸ்ஐஎஸ் மிரட்டல் விடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment