கனடா- மோன்றியலில் மேலாடை அற்ற வருடாந்த ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. மொன்றியல் மவுன்ட்-றோயல் பார்க்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடினர்.
இந்நிகழ்வு அமெரிக்காவில் தோற்றுவிக்கப்பட்ட ஒரு பாரிய சர்வதேச இயக்கத்தின் அம்சமாகும். இந்த இயக்கம் ஆண் பெண் இருபாலாருக்கும் சமஉரிமை கோரி வாதாடுகின்றது. இந்த வாதாட்டத்தில் பொது இடங்களில் மேலாடை இன்றி செல்வதும் அடங்குகின்றது. சர்வதேசரீதியில் இந்த வருடம் 7-வது ஆண்டாக இடம்பெறுகின்றது.
பெண்களிற்கு சகல இடங்களிலும் ஆண்களிற்கு சமமான அரசியலமைப்பு உரிமைகள் கிடைக்கவேண்டும் என்றும் அவர்கள் தங்கள் மார்புகளை மறைக்காத காரணத்திற்காக கைது செய்யப்படுவதோ அல்லது அவமானப்படுத்தப்படுவதோ தவிர்க்கப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்ட அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.
கனடா ஒரு சுதந்திரமான நாடாக இருக்க வேண்டும். சகல சுதந்திரங்களும் சட்டத்தால் பாதுகாக்கப்பட வேண்டும்.இந்த நிகழ்வு சம உரிமைகள் சம்பந்தப்பட்டது மட்டுமன்றி நிர்வாணம் மற்றும் பாலியல் இரண்டிற்கும் இடையிலான வேறு பாட்டை கற்றறிதலும் ஆகும். எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

top4top3