Monday, August 25, 2014

ரைஸ் பக்கெட் சவாலுக்கு ரெடியா?

உலகளவில் இணையத்தில் தீயாய் பரவி வந்த ஐஸ் பக்கெட் சவாலைப் போன்றே தற்போது சில நாட்களாக இந்தியாவில் ரைஸ் பக்கெட் சவால் என்ற ஒன்று பரவத் தொடங்கியுள்ளது.
ஏஎல்எஸ் நோய்க்கு நிதி திரட்ட தொடங்கப்பட்ட ஐஸ் பக்கெட் சவாலை மேற்கொண்டவர்களில் இந்திய நடிகைகள் முதல் உலக பிரபலங்களான பில்கேட்ஸ், மார்க் ஸக்கர்பர்க் வரை பெயர் பட்டியல் நீண்டது.
இந்நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த மஞ்சு லதா என்ற பெண்மணி கடந்த 24ம் திகதி ரைஸ் பக்கெட் சவால் என்பதனை தொடங்கியதோடு, இதற்காக சமூக வலைதளங்களில் தனி பக்கத்தையும் உருவாக்கியுள்ளார்.
இந்த சவாலின் நோக்கம் யாதெனில், இந்தியாவில் பல ஏழைகள் உணவுக்காக தடுமாறுவதால் அவர்களில் ஒருவருக்கு ஒரு பக்கெட் அரிசியோ அல்லது 100 ரூபாய் பணத்தையோ தந்து அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் #RiceBucketChallenge என்ற ஹேஷ் டேக்குடன் பதிவேற்ற வேண்டும் என்பதே ஆகும்.
இதன் மூலம் மக்களுக்கு நல்ல விழிப்புணர்வு ஏற்படுவதாகவும், இந்த ரைஸ் பக்கெட் சேலஞ்ச் மூலம் ஒருவரது உணவு தேவை நிறைவேற்றப்படுகிறது என்றும் ஐஸ் பக்கெட் சேலஞ்சில் தண்ணீர் வீணாக்கப்படுவது போல் இதில் இல்லை எனவும் சமூக ஆர்வலர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால் எந்த பிரபலமும் இதுவரை ரைஸ் பக்கெட் சேலஞ்சை செய்யாத போதும், சாதாரண மக்கள், கல்லூரி மாணவர்கள் என பலரும் இதனை செய்ய துவங்கியுள்ளனர்.
மேலும், இந்த சவாலை மக்கள் நன்கறிந்த பிரபலங்களும் மேற்கொள்ள தொடங்கினால் இந்த செயல் பலரையும் சென்றடையும் என்றும் அதனால் நாட்டில் பெரும்பாலான மக்களின் உணவு பிரச்னை ஓரளவிற்கு தீரும் என்று நம்புவதாக இந்த சவாலை ஏற்பாடு செய்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment