Monday, August 25, 2014

கனடாவில் மில்லியன் டொலர்களிற்குமேல் விலை பேசப்படும் தமிழர்களின் வாக்குகள்: அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!

கடந்த வாரம் கனடாவில் இடம்பெற்ற கட்சியொன்றின் உள்ளகத் தேர்தல், ஒட்டுமொத்த தமிழர்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இதுபற்றிய உண்மையான, ஆதாரபூர்வமான விடயங்களை அறிவதற்காக லங்காசிறி வானொலி நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியின் ஆய்வாளர் சுதர்மா அவர்களை வானலையில் இணைத்திருந்தது.
இதன் போது அவர் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு,
ஹரி ஆனந்தசங்கரி போன்ற நேர்மையுள்ள சுயசிந்தனையுள்ள இளைஞர்கள் மத்திய அரச ஆட்சியை அமைக்கக் கூடியதெனக் கருதப்படும் கன்சவேட்டிவ் கட்சி அல்லது லிபரல் கட்சியில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் பெறுவதை தமிழ்த் சமுதாயத்தை முன்வைத்து பேரம் பேசுதல் போன்றன செய்யும் ஒரு நபரால் தடுக்கப்படுகின்றது.
கனடாவில் தமிழர்களின் வாக்குக்களை வைத்துப் பேரம் பேசுவதன் மூலம் நடாத்தப்படும் இந்த அதியுச்ச மோசடி பல மில்லியன் டொலர்கள் சம்பந்தப்பட்டது என்பதை விடவும் சுயசிந்தனையுள்ள, சுதந்திர விருப்புள்ள தமிழர்கள் தாங்கள் விரும்பும் கட்சிக்கு அளிக்கும் வாக்குகள் அவர்களிற்கு தெரியாமலேயே விலை பேசப்பட்டே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
2006ம் ஆண்டில் விடுதலைப் புலிகள் அமைப்பை இந்த அரசு தடை செய்யப் போகிறார்கள் என்றவுடனேயே இந்த அரசு தொடர்பான தமிழர்களின் சந்திப்புக்கள் எதிலும் கலந்து கொள்ளாமல் பதுங்கியவர். குறிப்பாக விடுதலைப் புலிகளைத் தடை செய்வதற்கான ஊக்க பணப் பரிமாறலைக் கூடச் செய்திருந்தார்.
நாளை இவ்வாறான மோசடிகள் குறித்த உண்மைகள் தெரியவரும் போது கட்சிகள் மற்றும் கனடியத் தேசிய நீரோட்டம் இந்த ஒருசில நபர்களை நேர்மையற்றவர்கள் என்று கூறுவதற்குப் பதிலாக ஒட்டுமொத்தத் தமிழர்களும் நேர்மையற்றவர்கள் என்றே குற்றஞ்சாட்டும் என்பதே உண்மையாகும்.
ஹரி ஆனந்தசங்கரி வெற்றி பெற்ற தேர்தல் கனடிய லிபரல் கட்சியைப் பொறுத்தவரையில் இரண்டு வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.
முதலாவதாக கனடாவிலேயே அதிகமான அங்கத்துவர்கள் பதிவு செய்த தொகுதி என்பது, இரண்டாவது கனடாவிலேயே அதிகமாக அங்கத்துவர்கள் வாக்களித்த தொகுதி என்பதே அந்த வரலாற்றுச் செய்தியாகும்.
எதிர்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பலரும் தமிழ்த் தேசியத்திற்கான ஆத்மபூர்வ பங்களிப்பு, அர்ப்பணிப்பு உள்ளவர்கள். அவர்கள் எந்தவித அப்பழுக்குமில்லாமல் தமக்கு கூறப்பட்டதை நம்பினார்கள். செயற்பட்டார்கள்.
இப்போது எங்கோ ஒரு தவறு நடந்துவிட்டது என்பதையும் உணர்ந்து அதனை விவாதிக்கத் தொடங்கி விட்டார்கள். அவர்களது கருத்துக்களிற்கு நிஜயத்தின் தேடல் நிகழ்ச்சி விளக்கங்களை வழங்கத் தயார் எனத் தெரிவித்தார்.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmsyIRZLdeq5.html#sthash.Paw0WZeS.dpuf

No comments:

Post a Comment