Friday, August 22, 2014

கழுத்து வெட்டப்பட்டு கொலைசெய்யப்பட்ட அமெரிக்கரின் சோகம்: அருகில் இருந்தவர்களே காட்டிக்கொடுத்தார்கள் !


கடந்த 2 தினங்களுக்கு முன்னர் அமெரிக்க ஊடகவியலாலர் ஒருவரை, ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகள் கழுத்தை வெட்டிக் கொலைசெய்தார்கள். அந்த வீடியோவை இன்ரர் நெட்டில் ஏற்றி உலகை அதிரவைத்தார்கள். இது ஏன் நடந்தது ? என்று அனைவரும் ஆச்சரியப்படலாம். இப்போது தான் மெல்ல மெல்ல ரகசியங்கள் வெளியாகி வருகிறது. சிரியாவில் இயங்கிவரும் இந்த தீவிரவாத அமைப்பிடம் சுமார் 12 அமெரிக்கார்கள் கைதிகளாக உள்ளார்கள். ஆனால் ஜேம்ஸ் எனப்படும் இந்த ஊடகவியலாளரை மட்டும் அவர்கள் இவ்வளவு கொடுராமாக கொலைசெய்ய என்ன காரணம் ? இக்கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துவிட்டது. ஆம இன் நபரின் சகோதரர் அமெரிக்க வான் படையில் கடமையாற்றி வருகிறார்.
ஈராக்கில் இயங்கிவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் தற்போது, பெரும் தோல்வியை தழுவி வருகிறார்கள். சில வாரங்களுக்கு முன்னர் அவர்கள் ஈராக்கில் உள்ள பல நகரங்களை கைப்பற்றி வெற்றிக்கொடி நாட்டி வந்தார்கள். ஆனால் அமெரிக்கா தனது வான்படையை அனுப்பி அவர்கள் நிலைகள் மீது பாரிய தாக்குதலை தொடுத்தது. இதனால் அவர்கள் பாரிய இழப்பை சந்திக்க நேர்ந்துள்ளது. இத்தீவிரவாதிகள் வசம் இருந்த 2 நகரங்களை ஈராக்கிய படைகள் மீண்டும் கைப்பற்றி விட்டார்கள். அத்தோடு இத்தீவிரவாதிகளுக்கு சப்பிளை செல்லும் பாதைகளையும் அமெரிக்கா முடக்கிவிட்டது. இதனால் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு தற்போது பெரும் தோல்விகளை சந்தித்து வருகிறது. இவர்கள் அமெரிக்காவை பழிவாங்க பெரும் திட்டங்களை தீட்டி வந்தார்கள்.
இதேவேளை இவர்களிடம் பிடிபட்டு கைதியா உள்ள ஒரு நபர், தான் தப்புவதற்காக ஜேம்சின் சகோதரர் வான் படையில் உள்ளார் என்ற உண்மையை கூறிவிட்டார். இதன் கரணமாகவே ஜேம்ஸை அவர்கள் இவ்வறு படு பயங்கராமக கொலைசெய்துள்ளார்கள் என்று தற்போது அமெரிக்கா கூறியுள்ளது.

No comments:

Post a Comment