Thursday, August 21, 2014

சூப்பராக இங்கிலிஷ் பேசிய தீவிரவாதி யார்? வெளியான புதுத் தகவல் (வீடியோ இணைப்பு)


அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹேமன்ட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிலிப் ஹேமன்ட்(Philip Hammond) கூறியதாவது, ஐரோப்பாவைச் சேர்ந்த தீவிரவாதிகள் தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் ஃபோலே (James Foley) கொடூரமாக தலைதுண்டிக்கப்பட்ட காணொளியில் இருந்த தீவிரவாதி இங்கிலாந்து உச்சரிப்புடன் கூடிய ஆங்கிலத்தில் பேசுவது தெளிவாகத் தெரிகிறது.
இதன்மூலம் சிறிதும் ஈவு இரக்கமற்ற மிகக் கொடுமையான இயக்கம் ஐ.எஸ்.ஐ.எஸ் என்பது புலப்படுகிறது.
சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள இங்கிலாந்து நாட்டவரால், தற்போது எங்களது நாட்டின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.
இப்படிப்பட்ட குரூரமான இயக்கத்தினரிடமிருந்து ஈராக், சிரியாவைக் காப்பாற்ற உலக சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் பணியை இங்கிலாந்து தீவிரப்படுத்தும் என கூறியுள்ளார்
மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சிரியாவுக்கு 400 இங்கிலாந்து நாட்டவர் போயிருக்கலாம் என்று கருதுகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
http://newsonews.com/view.php?22cOl72bci80Mb4e3IMM402dBnB3dd0nBn5302C6A42e4A08Secb3lOAc3
தீவிரவாதிகளின் வெறிச்செயல் - அதிர்ச்சியில் ஒபாமா
[ வியாழக்கிழமை, 21 ஓகஸ்ட் 2014, 01:42.44 மு.ப GMT ]
ஈராக் மற்றும் சிரிய எல்லைப்பகுதியில் இஸ்லாமிய ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா வான் தாக்குதலை நடத்தி வருகிறது.
இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, செய்தியாளர் ஒருவரின் தலையை துண்டித்து தீவிரவாதிகள், அமெரிக்காவை அச்சுறுத்தியுள்ளனர்.
ஜேம்ஸ் ஃபோலே (James pole) எனும் அமெரிக்க செய்தியாளர் சிரியாவில் செய்தி சேகரித்து வந்தார்.
கடந்த 2012–ம் ஆண்டு நவம்பர் 22ம் திகதி முதல் இவரை காணவில்லை. இவருடன் ஸ்டீவன் ஜோயல் கோட்லாப் (Steven Joyal Gotlap) என்ற நிருபரும் மாயமானார்.

இந்த நிலையில் குறித்த செய்தியாளரை கொலை செய்த தீவிரவாதிகள், அதனை இணையத்தளங்களில் வெளியிட்டுள்ளன.
நான்கு நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய அந்த காணொளியில் நிருபர் ஜேம்ஸ் ஃபோலேயின் தலை துண்டித்து கொலை செய்யப்படும் காட்சி இடம் பெற்றிருந்தது.
தீவிரவாதிகளின் இச்செயலுக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த உலகமே பத்திரிகையாளர் ஜேம்ஸ் ஃபோலே கொல்லப்பட்ட விதத்தை பார்த்து திகைத்து நிற்பதாக ஒபாமா தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். கொடூரமான இச்செயலை செய்த இந்த தீவிரவாத புற்றுநோயை ஒழிக்க பொதுவான முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்றும் அப்போது தான் இப்படிப்பட்ட தாக்குதல்கள் பரவாமல் தடுக்க முடியும் எனவும் ஒபாமா மேலும் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment