Tuesday, August 19, 2014

கள்ளத்தொடர்பினை அதிகளவில் விரும்பும் ஐரோப்பிய பெண்கள் – லண்டனில் ஆய்வு !


கணவன் உறவு வைத்துக்கொள்ளவில்லை என்றால் வேறு ஆண்களுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளுவோமே தவிர கணவனை விவாகரத்து மட்டும் செய்ய மாட்டோம் என்று பெரும்பாலான ஐரோப்பிய பெண்கள் கூறுகிறார்கள்.
பெண்களின் புற செக்ஸ் தேவைகள் குறித்த ஆய்வொன்றை லண்டன் வின்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் பாலியல் மற்றும் விளையாட்டுத்துறை மேற்கொண்டது. இந்த ஆய்வில் பல வித்தியாசமான தகவல்கள் ஐரோப்பியப் பெண்கள் தெரிவித்துள்ளனர். ஆய்வின் தலைவர் பேராசிரியர் எரிக் ஆண்டர்சன் கூறுகையில்- மகிழ்ச்சியான தம்பதிகள் அனைவரும் செக்ஸில் மகிழ்ச்சியாக இருப்பதில்லை என்பதை இந்த ஆய்வில் தெளிவாக அறிய முடிந்தது.
திருமண பந்தத்தை தாண்டி வெளியில் உறவு வைத்துக்கொள்ள உதவும் இணையத்தளமொன்றில் உறுப்பினர்களாக இருக்கும் பெண்கள் மட்டும் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த ஆய்வில் திருமணமான 35 முதல் 45 வயதுக்குட்பட்ட 100 பெண்கள் இதில் பங்கேற்றதில் 67 பெண்கள் செக்ஸூக்காக மட்டுமின்றி வித்தியாசமான காதல் அனுபவத்துக்காகவும் பிறரிடம் செல்வதாக தெரிவித்துள்ளனர். காதலை நாகரீகமாக வெளிப்படுத்தும் ஆண்களை தேடி தாங்கள் அலைவதாகவும் இவர்கள் கூறியுள்ளனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் பிற ஆண்களிடம் போய் இன்பம் அனுபவித்துவிட்டு மீண்டும் தனது வீட்டுக்கே திரும்பத்தான் 100 பெண்களும் விரும்புகிறார்கள்.
வெளியே செக்ஸ் வைத்துக்கொள்வோம்- அதேநேரம் கணவனை விவாகரத்து செய்ய மாட்டோம் என்று ஆய்வில் பங்கேற்ற 100 பெண்களும் ஒரே மாதிரி சொல்லி ஆய்வுக் குழுவை ஆச்சரியப்படுத்தியுள்ளனர். ஆய்வில் பங்கேற்ற பெரும்பாலான பெண்கள் தங்களது கணவன் மகிழ்ச்சியாக வைத்துள்ளதாகவும் அன்போடு பழகுவதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே விவாகரத்து செய்துவிட்டு, வேறு கணவனை திருமணம் செய்வது தங்களுக்கு தேவையில்லை என்று அந்த பெண்கள் கூறியுள்ளனர். 47 சதவீத பெண்கள் திருமணத்துக்கு பிறகு ஒரே ஒரு ஆணுடன் மட்டுமே உறவை வைத்துக்கொள்ள விரும்புவதாக கூறியுள்ளனர். அந்த ஆணிடம் மனதுரீதியாக நெருங்கியிருந்தால்தான் உறவில் இயல்பாக இருக்க முடிவதால் கணவனை தவிர கூடுதலாக ஒரு ஆண் போதும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
காதலை தாண்டி மனைவியை உறவிலும் திருப்திப்படுத்த வேண்டும் அல்லது ஒரே உடலுடன் உறவு வைத்துக்கொள்வது பெண்களுக்கு போர் அடித்துவிடும் என்பதே இந்த ஆய்வின் மூலமாக ஆய்வாளர்கள் இறுதியாக கண்டறிந்த மையக்கருத்தாக உள்ளது.
http://www.athirvu.com/newsdetail/805.html

No comments:

Post a Comment