Friday, August 22, 2014

நடு ரோட்டில் வைத்து பெண் என்றும் பாராமல் தாக்கிய பொலிஸ் அதிகாரி: இனவெறி தான் காரணமா ?




அமெரிக்காவில் உள்ள கபலிஃபோனியா மாநிலத்தில் நடந்த சம்பவம் ஒன்று, உலகையே உலுக்கியுள்ளது. ஆபிரிக்க இனப் பெண் ஒருவரை நாயை அடிப்பது போல ஒரு பொலிஸ் அதிகாரி தாக்கியுள்ளார். இச்சம்வத்தை தற்செயலாக ஒருவர் தனது வாகனத்தில் பயணித்தவேளை கண்டுள்ளார். உடனே தனது மோபைல் போன் கமராவில் இதனை பதிவும் செய்துவிட்டார். அமெரிக்காவின் கலிஃபோனியா மாநிலத்தில் பல கறுப்பு இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இருப்பினும் அங்கே இனவெறியர்கள் அதிகம் இருப்பது இல்லை. ஆனால் குறிப்பிட்ட பெண்ணை இந்த வெள்ளை இனப் பொலிஸ் அதிகாரி இவ்வாறு தாக்க என்ன காரணம் என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். இதற்கு இனவெறி தான் காரணமாக இருக்கும் என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள்.
சம்பவ தினத்தன்று வீதியால் நடந்துசென்ற 51 வயது நிரம்பிய ஆபிரிக்க பெண்ணை , டானியல் என்னும் பொலிஸ் அதிகாரியே இவ்வாறு தாக்கியுள்ளார். குறித்த பெண் உதவிசெய்யுமாறு கூச்சலிட்டும் உள்ளார். டானியலை தாம் வேலையில் இருந்து உடனடியாக நிறுத்திவிட்டதாகவும். அவருக்கு எதிராக கடுமையான வழக்கை பதிவுசெய்துள்ளதாகவும் கலிஃபோனியப் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள். காரில் செல்லும் வேளை நடந்த அசம்பாவிதத்தை பதிவு செய்த நபரே இதனை ஆதாரமாக பொலிசாரிடம் காட்டியுள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

No comments:

Post a Comment