Sunday, August 31, 2014

பேத்தாளை வீரையடி மற்றும் சுங்காங்கேணி விநாயகர் ஆலய தீர்த்தோற்சவமும் மண்டூர் முருகன் ஆலய திருவிழாவும்!



மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு ஆலயங்களில் வருடாந்த திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ள மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
பேத்தாளை விநாயகர் ஆலயத்தின் தீர்த்தோற்சவம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் பேத்தாளை ஸ்ரீ வீரையடி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த பிரமோற்சவத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது.
கடந்த 22ம் திகதி அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த பிரமோற்சவ நிகழ்வுகள், ஒன்பது தினங்கள் இடம்பெற்று பத்தாம் நாளாகிய இன்று சுவாதி நட்சத்திரத்தில் தீர்த்தோற்சவத்துடன் முடிவுற்றது. இதன்போது நூற்றுக்கணக்கான பக்த அடியார்களும் கலந்து கொண்டனர்.
மண்டூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த திருவிழா
கிழக்கிலங்கையில் சின்னக்கதிர்காமம் என்றழைக்கப்படும் தில்லை மண்டூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த திருவிழா மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றது.
அதன் ஒரு கட்டமாக இந்து அடியார்கள் காரைதீவில் இருந்து ஆரம்பித்த பாதயாத்திரை கல்முனை பிரதான நகரை அடைந்து, கல்முனையில் உள்ள அம்பலத்தடி விநாயகர் ஆலயத்தை வந்து தரிசனம் செய்து, அங்கிருந்து தில்லை மண்டூர் முருகன் ஆலயத்தினை நோக்கி யாத்திரையை மேற்கொண்டிருந்தார்கள்.
இப் பாதயாத்திரையில் பல ஊர்களில் இருந்தும் முருகன் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்கள் எதிர்வரும் 8ஆம் திகதி தில்லை மண்டூர்க் கந்தனின் தீர்த்தோற்சவம் நடைபெறவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
வாழைச்சேனை சுங்காங்கேணி விநாயகர்  ஆலய தீர்த்த உற்சவம்
வாழைச்சேனை சுங்காங்கேணி அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் இறுதி நாள் தீர்த்த உற்சவம் இன்று நடைபெற்றது.
கடந்த 22ம் திகதி ஆரம்பமாகி, இன்று தீர்த்த உற்சவத்துடன் முடிவுற்றது.
ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்ட உற்சவகால நிகழ்வுகளை வந்தாறுமூலை மகா விஸ்ணு ஆலய பிரதமகுரு சைவ சிரோன்மனி சாதகசுடர் சாச்சிநாதன் தெய்வெந்திரன் குருக்கள் நடாத்தி வைத்ததுடன், கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUlq1.html

No comments:

Post a Comment